குராமைட்டு
குராமைட்டு (Kuramite) என்பது Cu3SnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சிடாணைட்டு குழு கனிமமாகக் கருதப்படும் இது சல்பைட்டு வகை கனிமமாகும். உசுபெக்கிசுதானில் உள்ள சட்கல்-குராமின்சுகி மலைகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள கோச்புலாக்கு Au-Ag-Te படிவுகளில் குராமைட்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
குராமைட்டு Kuramite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு |
வேதி வாய்பாடு | Cu3SnS2 |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல், வெள்ளி சாம்பல் |
படிக இயல்பு | ஊடுறுவல்கள், நூண்ணோக்கியளவு படிகங்கள் |
படிக அமைப்பு | நாற்கோணம் |
மோவின் அளவுகோல் வலிமை | 5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | உலோகத்தன்மை |
அடர்த்தி | 4.56 கி/செ.மீ3 |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
தோற்றம்
தொகுகுராமைட்டு கனிமம் தங்க-சல்பைடு-குவார்ட்சு இழைகளில் கோல்டுபீல்டைட்டு கனிமத்துடன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உசுபெக்கித்தானில் உள்ள கோச்புலாக்கு படிவுகளில் இது காணப்படுகிறது. நுண்ணிய படிகங்களாகவும் குராமைட்டு தோன்றுகிறது.[4]
ஆர்க்டிக் பெருங்கடல், அர்கெந்தினா, சிலி, காங்கோ, கிரீசு, அங்கேரி, சப்பான், ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குராமைட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இயற்பியல் பண்புகள்
தொகுமோவின் அளவு கோலில் குராமைட்டின் கடினத்தன்மை 5 ஆகும். மேலும் இதன் அடர்த்தி 4.56 ஆகும்.[2] உலோகப் பளபளப்பும் உலோகக் கோடுகளுடன் கூடிய ஒளிபுகா எஃகு சாம்பல் நிறமாகவும் குராமைட்டு காணப்படுகிறது.
வேதிப் பண்புகள்
தொகுகுராமைட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu3SnS4 என்பதாகும். இரும்பு, துத்தநாகம் மற்றும் இண்டியம் தனிமங்கள் இதனுடன் இருக்கும் அசுத்தங்களாகும்.[4][3]
தாமிரம் | 43.56% |
வெள்ளீயம் | 27.13% |
கந்தகம் | 29.31% |
எக்சுகதிர் படிகவியல் ஆய்வு
தொகுகுராமைட்டின் எக்சு-கதிர் ஆய்வு தூள் முறையைப் பயன்படுத்தி ஆராயப்பட்டது. உருசியாவின் அறிவியல் அகாடமியின் கனிமவியல் ஆய்வகத்தில், வசோவா என்பவரால் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. குராமைட்டு கனிமம் சிடானைட்டு -கெசுட்டரைட்டு குழுவுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது. a=5.445±0.005 Å, c=10.75±0.02 Å, c/a=1.972 என்ற அலகு செல் அளவுருக்களும் கண்டறியப்பட்டன.
d-இடைவெளி | வலிமை |
---|---|
3.13 Å | (10) |
1.914 Å | (8) |
1.640 Å | (6) |
1.108 Å | (4) |
1.244 Å | (3) |
2.70 Å | (2) |
1.044 Å | (2) |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kovalenker, V.A., Evstigneeva,T.L., Troneva, N.V., Vyal´sov, L.N. (1979) Kuramite, Cu3SnS4, a new mineral of the stannite group. Zapiski Vsesoyuznogo Mineralogicheskogo Obshchestva: 108: 564-569.
- ↑ 2.0 2.1 John W. Anthony, Richard A. Bideaux, Kenneth W. Bladh, and Monte C. Nichols, Eds., Handbook of Mineralogy, Mineralogical Society of America, Chantilly, VA 20151-1110, USA.
- ↑ 3.0 3.1 http://www.webmineral.com/data/Kuramite.shtml (accessed December 2023)
- ↑ 4.0 4.1 4.2 Hudson Institute of Mineralogy, 2023, Kuramite: https://www.mindat.org/min-2291.html (accessed December 2023)