குருபரவலசை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

குருபரவலசை (Kurubaravalasai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட மகனூர்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[1] இந்த ஊர் ஊத்தங்கரையில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 50 கி.மீ தள்ளியும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 616 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[2] 2709 (ஆண்கள் :1402 பெண்கள் : 1307) ஆகும்.[3] ஊரின் மொத்த எழுத்தறிவு விகிதம் 61.61% ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%ஐவிடக் குறைவு ஆகும்.

குருபரவலசை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
வட்டம்ஊத்தங்கரை
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,709
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635307

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

தொழில் தொகு

இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் வாழை, நெல், மற்றும் கரும்பு பயிரிடுதல் போன்றவை ஆகும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  2. 2011 Census of Krishnagiri District Panchayat Unions
  3. https://goo.gl/maps/EMY7xNimoU42
  4. "Kurubaravalasai Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருபரவலசை&oldid=3598866" இலிருந்து மீள்விக்கப்பட்டது