குருமாத்தூர் கல்வெட்டு
கேரளத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டு
குருமாத்தூர் கல்வெட்டு (Kurumathur inscription (கி.பி 9 ஆம் நூற்றாண்டு) என்பது வட கேரளத்தில் பல்லவ கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்ட ஒரு சமசுகிருத கல்வெட்டாகும். இது ஆரியகோடின் தெற்கில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோவிலைப் புதுப்பிக்கும் போது அகழ்வாய்வில் 2011 பெப்ரவரி மாதம், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டானது ஒரு கருங்கற்பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.[1][2][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
செய்பொருள் | கருங்கல் |
---|---|
எழுத்து | பல்லவ கிரந்தம் |
உருவாக்கம் | கி.பி.9ஆம் நூற்றாண்டு (24 மே, கி.பி. 871) |
தற்போதைய இடம் | கேரளம், ஆரீகோட் அருகில் உள்ள குருமாத்தூர் விஷ்ணு கோயில் |
அரியக்கோடானது காளியாறின் தென் கரையில், கரிக்கட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது கேரளாள்பதியில் குறிப்படப்பட்டுள்ள 32 பிராமணக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.
இந்தக் கல்வெட்டானது பின்வரும் தகவல்களை அளிக்கிறது
- அளவு: முன்று பத்திகள்
- ஆட்சியில் இருந்த மன்னரின் பெயர்: "இராம இராஜசேகரன்"
- நாள்: கி.பி. 871 மே 24
- உள்ளடக்கம்:
- "அரசன் இராம இராஜசேகரனின் புகழானது பெருங்கல் முழுவதும் பரவியுள்ளது"
- "இந்த இராஜசேகர மன்னன் இராமர் பிறந்த புகழ்பெற்ற இசுவாகு மரபில் பிறந்தவர்."[1]
- "நாட்டை மனு நீதி தவறாமல் ஆட்சிசெய்பவர்"[1]
- "இவரது நீதியான ஆட்சியில் பிராமணர்களுக்கு 12 கோயில் குளங்களை வெட்டியும் விஷ்ணுவின் சிலையும் நிறுவப்பட்டது"[1][2]