குருவாயூர் விரைவுவண்டி

குருவாயூர் விரைவுத் தொடருந்து (Guruvayur Express) இந்தியாவின் தென்னக இரயில்வேயினால் குருவாயூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இயக்கப்படும் விரைவுத் தொடருந்து ஆகும். முதலில் இது கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கும் குருவாயூருக்கும் இடையே இயக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக நாகர்கோவில், மதுரை, சென்னை வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2013-14 இரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்த விரைவுவண்டியின் இணைப்பாக மதுரை-தூத்துக்குடி இடையே இணைப்பு இரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களோடு இணைக்கிறது. இது கேரளாவின் ஆலப்புழா வழியே செல்கிறது. இந்த தொடருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களை பகல்நேரத்தில் சென்னையோடு இணைக்கிறது.

குருவாயூர் விரைவுவண்டி வழித்தடம்

16127 என்ற எண் கொண்ட வண்டி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் குருவாயூர் தொடருந்து நிலையத்தினை அடைகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண். 16128 குருவாயூர் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னையை மறுநாள் அடைகிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு