குருவா கோரன்ட்லா மாதவ்
குருவா கோரன்ட்லா மாதவ் (பிறப்பு: 1, சூன் 1969) என்பவர் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்துப்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் கே. மாதவ சுவாமி, ராமலு அம்மா ஆவர். இவர் இதற்கு முன்பு அனந்தபூர் மாவட்டத்தில் சர்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். [2]
குருவா கோரன்ட்லா மாதவ் Kuruva Gorantla Madhav | |
---|---|
ஹிந்துபூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | நிம்மல கிறிஸ்தப்பா |
தொகுதி | ஹிந்துபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூன் 1969 ஆந்திரப் பிரதேசம், கர்னூல், பி. ருத்ராவரம் |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
துணைவர் | கே. சவிதா |
பிள்ளைகள் | ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் |
வாழிடம்(s) | ஆந்திரப் பிரதேசம், அனந்த்பூர் |
தொழில்
தொகுமாதவ் அனந்தபூர் காவல்துறையினர் சங்கத்தின் பொதுச் செயலராக பணியாற்றினார். தேர்தலுக்கு முன்பாக 2018 செப்டம்பரில், மக்களவை உறுப்பினரான ஜே. சி. திவாகர் ரெட்டியும், அவரது தொண்டர்களும் தாடிபத்திரி அருகே உள்ள சின்னபோலமாதா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. காவல் துறையினரால் இக்கலவரத்தை அடக்க இயலவில்லை. அப்போது காவல் துறையினரைப் பார்த்து திவாகர் ரெட்டி மிகக் கேவலமாக பேசினார். கலவர இடத்தில் இருந்து ஓடிவிட்டார்கள் என்றும் திட்டினார். இதையடுத்து கோபமுற்ற மாதவ் காவல்துறையினரை அவரமரியாதையாக பேசிய ஜே. டி.திவாகர் ரெட்டி உள்ளிட்ட அரசியல்வாதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எச்சரித்தார். [3] [4]
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாதவ் ஆனந்தபூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பிரசித்தி பெற்றார். இதையடுத்து மாதவ் 2018 திசம்பரில் காவல் பணியியல் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, [5] சனவரி மாதம் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார். வியக்கத்தக்கதாக 2019 மார்ச் 16 அன்று ஜெகன் மோகன் ரெட்டியால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். [6] ஆனால் இவரது விருப்ப ஓய்வு கோரிக்கையானது காவல் துறையால் நிராகரிக்கப்பட்டது. [7] [8] இதனால் நீதிமன்றத்தை நாடிய மாதவ் தனக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று, உடனே காவல்துறை பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். முடிவில், ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்டு [9], தெலுங்கு தேசம் கட்சியின் நிம்மல கிறிஸ்தப்பாவை 140748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ https://www.indiatoday.in/elections/lok-sabha-2019/story/andhra-pradesh-lok-sabha-election-2019-results-full-winners-list-1533111-2019-05-23
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-05-30.
- ↑ "Anantapur MP JC Diwakar Reddy invites Kadiri CI Gorantla Madhav for showdown, complains against him in PS". The New Indian Express. 22 September 2018. http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2018/sep/22/anantapur-mp-jc-diwakar-reddy-invites-kadiri-ci-gorantla-madhav-for-showdown-complains-against-him-1875623.html. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Anantapur Police association threatens to cut netas’ tongues if they insult officers". The New Indian Express. 21 September 2018. http://www.newindianexpress.com/states/andhra-pradesh/2018/sep/21/anantapur-police-association-threatens-to-cut-netas-tongues-if-they-insult-officers-1875083.html. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Kadiri Urban CI quits, to join politics". The Hindu. 28 December 2018. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kadiri-urban-ci-quits-to-join-politics/article25863634.ece. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "YSRCP nominates two first-timers from Anantapur". The Hindu. 18 March 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/ysrcp-nominates-two-first-timers-from-anantapur/article26562929.ece. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Gorantla Madhav yet to be relieved". The Hindu. 24 March 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/gorantla-madhav-yet-to-be-relieved/article26622415.ece. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Naidu putting hurdles in my nomination process: Gorantla Madhav". The Hindu. 25 May 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/naidu-putting-hurdles-in-my-nomination-process-gorantla-madhav/article26628271.ece. பார்த்த நாள்: 25 May 2019.
- ↑ "Hindupur Election Result 2019: Kuruva Gorantla Madhav won". The Times of India. 24 May 2019. https://timesofindia.indiatimes.com/india/hindupur-constituency-lok-sabha-election-result-2019-kuruva-gorantla-madhav-leads/articleshow/69465568.cms. பார்த்த நாள்: 25 May 2019.