குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு (Chromium(III) acetylacetonate) என்பது Cr(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிமவேதியியல் சேர்மமாகும். இருங்கிணைவுச் சேர்மமான இதை சில சமயங்களில் Cr(acac)3.எனச் சுருக்கக் குறியிட்டும் அழைப்பர். அணுக்கருக் காந்த உடனிசைவு நிறமாலையியலில் தளர்வு முகவராக இந்த கருஞ்சிவப்பு அணைவுச் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையும் பண்பும் இதன் காந்த ஈர்ப்புத் திறனும் இதற்குரிய காரணங்களாகும்.
திண்ம குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு
| |
வேறு பெயர்கள்
டிரிசு(2,4-பெண்டேண்டையோனோ)குரோமியம்(III), Cr(acac)3, Cr(pd)3
| |
இனங்காட்டிகள் | |
21679-31-2 | |
ChEBI | CHEBI:33035 |
ChemSpider | 2006256 |
EC number | 244-526-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24884255 |
| |
பண்புகள் | |
Cr(C5H7O2)3 | |
வாய்ப்பாட்டு எடை | 349.32 |
தோற்றம் | ஆழ்ந்த கருஞ்சிவப்பு |
அடர்த்தி | 1.34 கி/செ.மீ3 |
உருகுநிலை | 210 °C (410 °F; 483 K) |
கொதிநிலை | 340 °C (644 °F; 613 K) (100 °செ வெப்பநிலையில் பதங்கமாகும்) |
முனைவற்ற கரிமக் கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் கட்டமைப்பும்
தொகுகுரோமியம்(III) ஆக்சைடும் அசிட்டைலசிட்டோனும் சேர்ந்து வினைபுரிவதால் குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு உருவாகிறது :[2]
- Cr2O3 + 6 Hacac → 2 Cr(acac)3 + 3 H2O.
D3 படிகச் சீரொழுங்கை குரோமியம்(III) அசிட்டைலசிட்டோனேட்டு வெளிப்படுத்துகிறது. Cr-O அணுக்களுக்கு இடையில்1.93 Å இடைவெளி காணப்படுகிறது [3]. இந்த அணைவுச் சேர்மத்தை டைபென்சாயில்டார்ட்டரேட்டுடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுவிளை பொருளாக இதன் தனித்தனி எதிருருக்களைப் பிரிக்கவியலும் [4].
மற்றும் பல Cr(III) சேர்மங்களைப் போல இதுவும் நாற்கூட்டு கீழ்நிலை ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் பதிலீட்டிற்கு இச்சேர்மம் ஒப்பீட்டளவில் மந்தமாகச் செயல்படுகிறது. ஆனால் வெட்டும் வளையங்களில் 3 ஆவது நிலையில் புரோமினேற்றம் செய்யும் வினையில் நன்றாக ஈடுபடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chromium acetylacetonate at American Elements
- ↑ W. Conard Fernelius, Julian E. Blanch “Chromium(III) Acetylacetonate: [Tris(2,4-Pentanediono)Chromium(III)]” Inorganic Syntheses, 1957, Volume 5, 130-131.எஆசு:10.1002/9780470132364.ch35
- ↑ B. Morosin "The crystal structure of trisacetylacetonatochromium(III)" Acta Crystallogr. 1965. vol. 19, 131-137. எஆசு:10.1107/S0365110X65002876
- ↑ Drake, A. F.; Gould, J. M.; Mason, S. F.; Rosini, C.; Woodley, F. J. (1983). "The optical resolution of tris(pentane-2,4-dionato)metal(III) complexes". Polyhedron 2: 537-538. doi:10.1016/S0277-5387(00)87108-9. https://archive.org/details/sim_polyhedron_1983_2/page/537.