குர்ரம் மாவட்டம்

குர்ரம் மாவட்டம் (Kurram District) (பஷ்தூ: کرم ولسوالۍ, உருது: ضلع کرم‎), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4][5] இதன் நிர்வாகத் தலைமையிடம் பராச்சிநர் நகரம் ஆகும். பராச்சிநர் நகரம், கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு தென்மேற்கே 252 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் 98.6% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் குர்ரம் ஆறு பாய்கிறது. இதன் பெரும்பான்மை மக்கள் பஷ்தூ மொழி பேசும் சியா இசுலாம் பிரிவினர் ஆவார். இம்மாவட்டத்தின் கிழக்கு, வடகிழக்கு பகுதி தவிர மற்ற பகுதிகள் ஆப்கானித்தான் நாட்டை எல்லைகளாக கொண்டுள்ளது.

குர்ரம் மாவட்டம்
மாவட்டம்
மேல்:குர்ரம் நகரத்தின் காட்சி
கீழ்:பராசினார் மலைகள்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் குர்ரம் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் குர்ரம் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்பராச்சிநர்
தாலுகாக்கள்3
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்3,380 km2 (1,310 sq mi)
மக்கள்தொகை
 (2017)[2]
 • மொத்தம்6,15,372
 • அடர்த்தி180/km2 (470/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
மொழிபஷ்தூ மொழி (98.6%)[1]:20
இணையதளம்kurram.kp.gov.pk

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 615,372 ஆகும். அதில் ஆண்கள் 3,06,935 மற்றும் பெண்கள் 3,08,393 உள்ளனர். எழுத்தறிவு 40.43% கொண்டுள்ளது. 93.82% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 904 பேர் மட்டுமே உள்ளனர்.[2] 98.6% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

குர்ரம் மாவட்டம் 3 தாலுகாக்கள் கொண்டது.[6]அவைகள்:

  • மத்திய குர்ரம் தாலுகா
  • கீழ் குர்ரம் தாலுகா
  • மேல் குர்ரம் தாலுகா

சட்டமன்றப் பிரதிநிதிகள்

தொகு

கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1998 Census report of Kurram Agency. Census publication. Vol. 140. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
  2. 2.0 2.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  3. Rigvida. "The Northwestern Rivers.". The Geography of the Rigveda-Chapter 4. http://www.tri-murti.com/ancientindia/rigHistory/ch4.htm. பார்த்த நாள்: 2022-11-28. 
  4. Morgenstierne, Georg (2003). A New Etymological Vocabulary of Pashto (in ஆங்கிலம்). Reichert. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89500-364-6. Kuram'a f. - "the river Kurram". Early Loanword < Indo-Aryan, Rig-Veda krumu - f.
  5. "Sanskritdictionary.com: Definition of krumuḥ". sanskritdictionary.com. Archived from the original on 2022-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-02-16.
  6. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.

உசாத்துணை

தொகு
  • Martin, Gerald (1879). "Survey Operations of the Afghanistan Expedition; The Kurram Valley." In Proceedings of the Royal Geographical Society and Monthly Record of Geography, New Monthly Series, Vol. 1, No. 10 (Oct. 1879), pp. 617-645.
  • Bowles, Gordon T. (1977). The People of Asia. London. Weidenfeld & Nicolson.
  • Scott-Moncrieff, Major-General Sir George K. "The Roads of the North-West Frontier." Blackwood's Magazine, No. MCCCIV, Vol. CCXV, June 1924, pp. 743–757.
  • Swinson, Arthur (1967). North-West Frontier. Frederick A. Praeger, New York, Washington.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ரம்_மாவட்டம்&oldid=4110726" இலிருந்து மீள்விக்கப்பட்டது