வசீரிஸ்தான்

வசீரிஸ்தான் (Waziristan) (பஷ்தூ மற்றும் உருது: وزیرستان‎, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானித்தான் எல்லையை ஒட்டி அமைந்த பகுதியாகும். வசிரிஸ்தானின் பரப்பளவு 11,585 சகிமீ ஆகும். இது பெஷாவருக்கு தெற்கில் 364 கிமீ (226.2 மைல்) தொலைவிலும்; ஆப்கானித்தான் தலைநகர் காபூலுக்கு தெற்கில் 442 கிமீ (274.6 மைல்) தொலைவிலும் உள்ளது.

பாகிஸ்தானின் (வெள்ளை நிறம்) நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதியில் வசீரிஸ்தானின் அமைவிடம் (பச்சை நிறம்)
பாகிஸ்தானின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வடக்கு வசீரிஸ்தான் (ஊதா நிறம்) மற்றும் தெற்கு வசீரிஸ்தான் (நீல நிறம்)

வசீரிஸ்தானில் பஷ்தூ மொழி பேசும் இசுலாமிய பஷ்தூன் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர். வசிரிஸ்தான் நிர்வாக வசதிக்காக தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

2018-வரை வசீரிஸ்தான் பாகிஸ்தான் அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகளில் இருந்தது. 2018 முதல் இப்பகுதி கைபர் பக்துன்வா மாகாணத்தின் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டங்களாக உள்ளது. [1][2]

2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை5,43,254[3]தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை 6,74,065 ஆகும். [4].வசீரிஸ்தான் மலைப்பகுதிகளில் ஆப்கானித்தான் தலிபான்களின் தீவிரவாத செயல்களின் கூடாரமாக விளங்குவதை, கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "President signs constitutional amendment to merge FATA with KP". www.pakistantoday.com.pk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
  2. Yusufzai, Ashfaq (2018-06-28). "KP plans to take control of Fata health directorate" (in en-US). DAWN.COM. https://www.dawn.com/news/1416536. 
  3. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP - North Waziristan" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
  4. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP - South Waziristan" (PDF). www.pbscensus.gov.pk. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.

மேலும் படிக்க

தொகு
  • Fürstenberg, Kai (2012) Waziristan: Solutions for a Troubled Region in Spotlight South Asia, No. 1,

பன்னாட்டுத் தர தொடர் எண் 2195-2787 (http://www.apsa.info/wp-content/uploads/2012/10/SSA-1.pdf பரணிடப்பட்டது 2015-09-07 at the வந்தவழி இயந்திரம்)

  • Roe, Andrew M. Waging War in Waziristan: The British Struggle in the Land of Bin Laden, 1849–1947 (Lawrence: University Press of Kansas, 2010) 313 pages
  • Operations in Waziristan 1919–1920, Compiled by the General Staff, Army Headquarters, India, 1923 (Reprinted by Naval & Military Press and Imperial War Museum, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84342-773-7)
  • Systems of Survival (1992) by Jane Jacobs. Jacobs cites a story from the 16 July 1974 issue of The Wall Street Journal in which a Pathan husband in Waziristan reportedly cut off his wife's nose because he was jealous. Thinking the better of it, he took her to a surgeon to have the injury repaired. Upon finding out that an operation would cost thirty rupees, he called it off, saying he could buy a new wife for eighty rupees. Jacobs cites this incident as evidence contradicting the platitude that society is based on the family. Instead, each family is based on whatever society it finds itself in. (Jacobs' discussion in her book is viewable on Amazon.com. Search for "Pathan".)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Waziristan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீரிஸ்தான்&oldid=3570477" இலிருந்து மீள்விக்கப்பட்டது