குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் 51 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்ட்சியர் அலுவலகம் குறிஞ்சிப்பாடி நகரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் பட்டியல் சமூகத்தினர் மக்கள் தொகை 65,919 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 873 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகுறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விருப்பாட்சி
- வெங்கடாம்பேட்டை
- வழுதலம்பட்டு
- வரதராஜன்பேட்டை
- வாண்டியாம்பள்ளம்
- வானதிராயபுரம்
- வடக்குத்து
- வடக்குமேலூர்
- தியாகவல்லி
- தீர்த்தனகிரி
- தம்பிபேட்டைப்பாளையம்
- தம்பிப்பேட்டை
- தையல்குணாம்பட்டினம்
- சிறுபாலையூர்
- சமட்டிக்குப்பம்
- ரெங்கநாதபுரம்
- புலியூர்
- பூவானிக்குப்பம்
- பெத்தநாயக்கன்குப்பம்
- பெருமாத்தூர்
- நைனார்குப்பம்
- மேலப்புதுப்பேட்டை
- மருவாய்
- குருவப்பன்பேட்டை
- குண்டியமல்லூர்
- கிருஷ்ணன்குப்பம்
- கீழூர்
- காயல்பட்டு
- கருங்குழி
- கண்ணாடி
- கள்ளையன்குப்பம்
- கல்குணம்
- இந்திரா நகர்
- பூதம்பாடி
- ஆயிக்குப்பம்
- ஆதிநாராயணபுரம்
- அரங்கமங்கலம்
- அனுக்கம்பட்டு
- அன்னதானம்பேட்டை
- ஆண்டார்முள்ளிப்பள்ளம்
- அம்பலவாணன்பேட்டை
- ஆலப்பாக்கம்
- அகரம்
- ஆடூர் அகரம்
- கோரணப்பட்டு
- கோதண்டராமபுரம்
- கொளக்குடி
- கொத்தவாச்சேரி
- மதனகோபாலபுரம்
- தொண்டமாநத்தம்
- திருச்சோபுரம்
வெளி இணைப்புகள்
தொகு- கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்