வகைமைப் பேரினம்

(குறிப்புப் பேரினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வகைமைப் பேரினம் (Type genus) என்பது உயிரியல் வகைப்பாட்டில் உயிரியல் குடும்பத்தையும் குடும்பப் பெயரின் மூலத்தையும் வரையறுக்கும் பேரினமாகும்.[1]

காட்டு வாத்து (பெண்)(அனாஸ் பிளாட்டிரிஞ்சோஸ்) மற்றும் குஞ்சுகள். அனஸ் என்பது அனாடிடே குடும்பத்தின் மாதிரி பேரினமாகும்.


விலங்கியல் பெயரிடல் தொகு

விலங்கியல் பெயரிடலின் பன்னாட்டுக் குறியீட்டின் படி, "பெயரிடப்பட்ட குடும்ப-குழு உயிரலகு வகையின் பெயரைத் தாங்கும் பேரினம் ’வகைமைப் பேரினம்’ எனப்படும். குடும்பக் குழுவின் பெயர் வகைமைப் பேரினத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது." [2]

எந்தவொரு குடும்பக்குழுப் பெயரிலும் ஒரு வகைமைப் பேரினம் இருக்க வேண்டும் (மற்றும் எந்த இனத்தின் பெயரிலும் ஒரு வகைமை இனம் இருக்க வேண்டும், ஆனால் எந்த இனங்கள்-குழுப் பெயரிலும், அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைமைகள் இருக்கலாம், ஆனால் தேவையில்லை). குடும்பக்குழுப் பெயருக்கான வகைப் பேரினத்தின் பெயருடன் -யிடே (குடும்பங்களுக்கு) என முடிவடையும் பின்னொட்டு சேர்க்கப்படும்.

எடுத்துக்காட்டு: பார்மிசிடே என்ற குடும்பப் பெயரின் வகைமை பேரினம் பார்மிகாவைலின்னேயஸ், 1758 அடிப்படையாகக் கொண்டதாகும்..

தாவரவியல் பெயரிடல் தொகு

தாவரவியல் பெயரிடலில், "வகை இனம்" என்ற சொற்றொடர், அதிகாரப்பூர்வமற்ற முறையில், வசதிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்து நெறிமுறையில் இந்த சொற்றொடருக்கு ஒப்புதல் இல்லை. குறியீடு, குடும்பம் வரையிலான அணிகளுக்கு வகைமைகளைப் பயன்படுத்துகிறது. மேலும் உயர் பிரிவுகளுக்கு வகைமை, ஒருவிருப்பத் தேர்வாக உள்ளது. இந்தக் குறியீடு அந்த வகையைக் கொண்ட பேரினத்தை " வகைமைப் பேரினம்" என்று குறிப்பிடவில்லை.

எடுத்துக்காட்டு: " பொ என்பது பொவேசி குடும்பத்தின் வகைமையும் பொல்சு வரிசையின் வகைமையாகும்" ஆகும் என்பது பொவேசி மற்றும் பொல்சு என்ற பெயர்கள் பொ என்ற பொதுவான பெயரை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறுவதற்கான மற்றொரு வழியாகும்..

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வகைமைப்_பேரினம்&oldid=3932667" இலிருந்து மீள்விக்கப்பட்டது