குறைத்துடிப்பு இதயம்
குறைத்துடிப்பு இதயம் (bradycardia) ஒருவரின் ஓய்வு இதயத் துடிப்பு வழமையாக நிமிடத்திற்கு ஆணிற்கு 60க்கு கீழாகவும் பெண்களுக்கு 50க்கு கீழாகவும் உள்ளதைக் குறிக்கிறது.[1] குறைத்துடிப்பு நிமிடத்திற்கு 40 வரை எந்தவொரு நோயறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. சோர்வு, பலவீனம், தலைசுற்றல், வேர்த்தல் ஆகியன நோயறிகுறியாக உள்ளன; மிகக் குறைவான இதயத்துடிப்பு இருக்கையில் மயக்கமுண்டாகிறது.[2]
குறைத்துடிப்பு இதயம் Bradycardia | |
---|---|
ஒத்தசொற்கள் | குறைத்துடி இலயமின்மை, குறுமிதயத் துடிப்பு |
உணரி II இல் காணப்படும் இதய மேலறைக் கணு குறைத்துடிப்பு, இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 50ஆக உள்ளது. | |
பலுக்கல் | |
சிறப்பு | இதயவியல் |
நிகழும் வீதம் | 15% (ஆண்கள்), 7% (பெண்கள்) |
மிக்கப் பயிற்சி பெற்ற மெய்வல்லுநர்களின் மெய்வல்லுநர் இதய நோய்த்தொகுதியில் மிகக் குறைவான இதயத் துடிப்பு ஏற்படுகின்றது. இது ஓர் விளையாட்டுக்கேற்ற ஒத்தமைதல் ஆகும். இதனால் பயிற்சியின் போது இதயத் துடிப்பு மிகைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.[3]
இதயத் தடிப்பு நிமிடத்திற்கு 60க்கு கீழே இல்லாவிடினும் ஒருவரின் தற்போதைய மருத்துவ நிலையில் மிகக் குறைவானதாக கருதப்படும் இதயத் துடிப்பு "சார்பு குறைத்துடிப்பு" என்ற சொல்லால் குறிப்பிடப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Types of Arrhythmia". 1 July 2011. Archived from the original on 7 June 2015. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
- ↑ Sinus Bradycardia – eMedicine
- ↑ Baggish, Aaron L.; Wood, Malissa J. (2011-06-14). "Athlete's heart and cardiovascular care of the athlete: scientific and clinical update". Circulation 123 (23): 2723–2735. doi:10.1161/CIRCULATIONAHA.110.981571. பன்னாட்டுத் தர தொடர் எண்:1524-4539. பப்மெட்:21670241.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|