குற்றப் புலனாய்வுத் துறை (இந்தியா)
குற்றப் புலனாய்வுத் துறை ( சிஐடி, Criminal Investigation Department (India)) என்பது குற்ற விசாரணைக்கு பொறுப்பான இந்தியாவின் மாநிலக் காவல் சேவைகளின் ஒரு கிளை ஆகும். இது பிரித்தானிய காவல் படைகளின் குற்றப் புலனாய்வுத் துறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
உருவாக்கம் மற்றும் அமைப்பு
தொகு1902 ஆம் ஆண்டு முதல் சிஐடி பிரித்தானிய அரசாங்கத்தால் பொலிஸ் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இலக்னோவில் உள்ள கோகலே மார்க்கில் உள்ள சிஐடி அலுவலகத்தின் நுழைவாயிலில், "இந்திய சிஐடியின் தந்தை" என்ற தலைப்புடன், கிங்ஸ் போலீஸ் மெடலிஸ்ட் (கேபிஎம்) மற்றும் பிரித்தானிய பேரரசின் (எம்பிஇ) உறுப்பினரான ராய் பகதூர் பண்டிட் ஷம்பு நாத்தின் உருவப்படம் உள்ளது.[1][2] 1929 இல், சிஐடி சிறப்புப் பிரிவு, சிஐடி மற்றும் குற்றப் பிரிவு (சிபி-சிஐடி) எனப் பிரிக்கப்பட்டது.
சிஐடி கிளைகள்
தொகுசிஐடி மாநிலத்திற்கு மாநிலம் பல கிளைகளைக் கொண்டிருக்கலாம். இந்த கிளைகளில் பின்வருவன அடங்கும்:[3]
- சிபி-சிஐடி
- மாந்தக் கடத்துகை மற்றும் காணாமல் போன நபர்களுக்கு எதிரான பிரிவு
- போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவு
- கைரேகைப் பணியகம்
- சி.ஐ.டி
- பயங்கரவாத எதிர்ப்புப் படை
குற்றப்பிரிவு சி.ஐ.டி
தொகுசிபி-சிஐடி என்பது சிஐடியின் சிறப்புப் பிரிவாகும், இது கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) தலைமையிலானது மற்றும் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) இதற்கு துணையாக இருப்பார். இந்தக் கிளைப் பிரிவானது, கொலை , கலவரம், பொய்யாவணம், கள்ளநோட்டு மற்றும் மாநில அரசு அல்லது உயர் நீதிமன்றத்தால் சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை விசாரிக்கிறது.[4]
பரவலர் பண்பாட்டில்
தொகுமும்பையின் கிளையை அடிப்படையாகக் கொண்ட, ஒரு தொலைக்காட்சித் தொடரான சிஐடி (இந்திய தொலைக்காட்சித் தொடர்) சோனி தொலைக்காட்சியில் 20 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.
குறிப்புகள்
தொகு
- ↑ "CBCID" (PDF). TN police. Archived from the original (pdf) on 2011-10-11. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.
- ↑ "CID - History". Maharashtra CID. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.
- ↑ "CID COMPOSITION". Sikkim police. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.
- ↑ "Crime Branch CID". Kerala police. Archived from the original on 2013-04-04. பார்க்கப்பட்ட நாள் 2013-05-27.