குலிசுத்தான், ஈரான்

ஈரான் நகரம்

குலிசுத்தான் (Golestan, பாரசீக மொழி: گلستان‎, பிற பெயர் : Golestān) என்ற நகரமானது பகாரிசுத்தான் (Baharestan) மண்டலத்தின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 57,216 குடும்பங்கள் இந்நகரில் வாழ்ந்தனர். அவர்களின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 231,882 நபர்களாக இருந்தனர். கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு அமைப்பு அடிப்படையில், இந்நகரத்தின் காலநிலையை குளிர் அரை வறண்ட (BSk) என வகைப்படுத்துகின்றனர்.[2] கோடையில், அதன் சராசரி வெப்பநிலை தெகுரான் நகரத்தை விட, குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே, இந்நகரத்தின் குளிர்கால வெப்பநிலையும், தெகுரான் நகரை விட குளிர்ச்சியாகவே இருக்கிறது. ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 35 வது இடத்தினைப் பெறுகிறது.[1]

குலிசுத்தான்
گلستان
நகரம்
குலிசுத்தான் is located in ஈரான்
குலிசுத்தான்
குலிசுத்தான்
ஆள்கூறுகள்: 35°46′33″N 51°28′20″E / 35.77583°N 51.47222°E / 35.77583; 51.47222
நாடு ஈரான்
மாகாணம்தெகுரான் மாகாணம்
மண்டலம்பாஃகாரெசுடன் மண்டலம்
பாக்ச்சுகோலெசுதான் மாவட்டம்
மக்கள்தொகை
 (2016 Census)
 • நகர்ப்புறம்
2,39,556 [1]
நேர வலயம்ஒசநே+3:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+4:30 (IRDT)

மக்கள் தொகை

தொகு

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[3][4] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 239,556 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 259,480 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு −7.68% குறைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 https://www.amar.org.ir/english
  2. "Climate: Golestan - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 9 September 2013.
  3. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  4. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலிசுத்தான்,_ஈரான்&oldid=3085938" இலிருந்து மீள்விக்கப்பட்டது