குல்சார் சிங் ராணிகே
குல்சார் சிங் ராணிகே (Gulzar Singh Ranike) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், சிரோமணி அகாலி தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்திய பஞ்சாப் அரசின் மேனாள் அமைச்சராவார்.
குல்சார் சிங் ராணிகே | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப் (இந்தியா) | |
பதவியில் 1997 - 2017 | |
முன்னையவர் | சுக்தேவ் சிங் செபாசுபுரி |
பின்னவர் | தற்போது பதவி வகிப்பவர் |
தொகுதி | அட்டாரி |
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை | |
பதவியில் 2007 - 2012 | |
முன்னையவர் | அமரிந்தர் சிங் |
பின்னவர் | சுக்பீர் சிங் பதால் |
எஸ்சி மற்றும் பிசி அமைச்சர் | |
பதவியில் 2007 - 2017 | |
முன்னையவர் | குர்கான்வால் கவுர் |
பின்னவர் | தற்போது பதவி வகிப்பவர் |
கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத்துறை அமைச்சர் | |
பதவியில் 2007 - 2017 | |
முன்னையவர் | ஜெகமோகன் சிங் காங் |
பின்னவர் | தற்போது பதவி வகிப்பவர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சனவரி 1958 ராணிகே, அமிருதசரசு, இந்தியா |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் |
இணையத்தளம் | http://gulzarsinghranike.in |
முந்தைய பஞ்சாப் அரசாங்கத்தில் ஆய அமைச்சராக இருந்தவர். அந்த அரசில் கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். [1] 2012 முதல் 2017 வரை இந்தப் பதவியில் இருந்தார். சிரோமணி அகாலி தளப் பட்டியலினப் பிரிவின் தலைவராகவும் உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமசாபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையும் அகாலிதளத்தின் தலைவராக இருந்தார். [2]
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் தனது அரசியல் வாழ்க்கையை 1983 இல் ராணிகேவின் சர்பஞ்சாக (கிராமத் தலைவர்) தொடங்கினார். முதன்முதலில் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு 1997 இல் அகாலி தள வேட்பாளராக அட்டாரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 2002, 2007 மற்றும் 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5] [6] [7] 2007 இல் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், பட்டியல் மற்றும் பிசிக்கள் நலன், விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். [8] 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு, தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம், SC & BC நலன் அமைச்சராக இருந்தார், அதேசமயம் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறை துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கு ஒதுக்கப்பட்டது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Punjab Cabinet Ministers Portfolios 2012 பரணிடப்பட்டது 2014-02-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Pioneer, The. "SAD fields Gulzar Singh Ranike from Faridkot". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1992 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB
- ↑ "Punjab Assembly Election 2002 Results". Archived from the original on 5 August 2018. பார்க்கப்பட்ட நாள் 11 April 2013.
- ↑ Punjab Assembly Elections-2002 winners
- ↑ Punjab Assembly Election 2007 Results பரணிடப்பட்டது 2013-05-08 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Results Punjab State Assembly Elections 2012 பரணிடப்பட்டது 2013-05-06 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Badal allocates portfolios