குல்சி ஆறு
குல்சி ஆறு (Kulsi River) இந்திய மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறாகும். இந்த ஆறு மேகாலயாவின் மேற்கு காசி மலையிலிருந்து உருவாகிறது. குல்சி ஆறு தொடங்கும் இடத்தில் கிர் ஆறு என்று அழைக்கப்படுகிறது. மேகாலயாவில் 12 கி.மீ தூரம் பயணித்த பின்னர், இந்த ஆறு அசாமின் காமரூப் மாவட்டம் வழியாகப் பாயும் போது குல்சி என்று அழைக்கப்படுகிறது. அசாமில் காமரூப் மாவட்டத்தில் நாகபேரா அருகில் பிரம்மபுத்திரா ஆற்றில் கலக்கின்றது.[சான்று தேவை]
குல்சி ஆறு Kulsi River | |
---|---|
குல்சி ஆற்றில் தென்னாசிய ஆற்று ஓங்கில் | |
பெயர் | কুলশী নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | காமரூப் மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | மேற்கு காசி மலை மாவட்டம் |
⁃ அமைவு | மேகாலயா |
⁃ ஆள்கூறுகள் | 25°33′55.7″N 91°39′34.4″E / 25.565472°N 91.659556°E |
முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
⁃ அமைவு | நாகபேரா, காமரூப் மாவட்டம், அசாம் |
⁃ ஆள்கூறுகள் | 26°07′10.4″N 91°00′04.4″E / 26.119556°N 91.001222°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | குல்சி ஆறுr - பிரம்மபுத்திரா ஆறு |
ஓங்கிலின் வாழ்விடம்
தொகுகுல்சி ஆறானது அருகிவரும் தென்னாசிய ஆற்று ஓங்கிலின் (பிளாட்டானிடா கேஞ்ஜிடிக) வாழ்விடமாக உள்ளது. இந்த ஆபத்தான ஓங்கில் (சிகு என அசாமிய மொழியில் அழைக்கப்படுகிறது) பிரம்மபுத்திரா வடிநிலப்பகுதியில், குல்சி மற்றும் சுபன்சிரி ஆறுகளில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்.[1] இப்பகுதியில் மணல் சுரங்கம் பிற மேம்பாட்டு நடவடிக்கைகள் குல்சி ஆற்றில் காணப்படும் ஓங்கில்களைப் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. இதன் காரணமாக எண்ணிக்கை ஏராளமாகக் குறைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Summary of Dolphin habitat zone of river Kulsi" (PDF).
- ↑ "Brahmaputra tributaries no longer secure dolphin habitats". Northeast Now (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 January 2019.