தென்னாசிய ஆற்று ஓங்கில்

Sarcopterygii

தென்னாசிய ஆற்று ஓங்கில் (Platanista gangetica) என்பது நன்னீரில் வாழும் ஓங்கில் இனமாகும். இது இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது, இதனை மேலும் இரு கிளை இனங்களாக பிரிக்கலாம், கங்கை ஆற்று ஓங்கில் (P. g. gangetica) மற்றும் சிந்து ஆற்று ஓங்கில் (P. g. minor).[2] 1970 முதல் 1998 வரை அவை தனி இனமாக அறியப்பட்டு வந்தாலும், 1998 இல் அவை தென்னாசிய ஆற்று ஓங்கில் இனத்தின் துணையினங்களாக வகைப்படுத்தப்பட்டன. கங்கை ஆற்று ஓங்கில் பெரும்பாலும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் பாய்கின்ற நேபாளம், இந்தியா, பங்களாதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது, சிந்து ஆற்று ஓங்கில், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி மற்றும் பியாஸ் ஆறு மற்றும் சத்லஜ் ஆறு ஆறுகளில் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு, கங்கை ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரிப்பட்டுள்ளது.[3] சிந்து ஆற்று ஓங்கிலை பாகிஸ்தானிய அரசாங்கம் அதனுடைய தேசிய நீர்வாழ் விலங்காக அங்கீகரித்துள்ளது.[4] மேலும், கங்கை ஆற்று ஓங்கிலை குவகாத்தி நகரம் அதனுடைய நகர விலங்காக தேர்ந்தெடுத்துள்ளது.[5]

தென்னாசிய ஆற்று ஓங்கில்
கங்கை ஆற்று ஓங்கில்
அளவில் ஓப்பீடும்பொழுது சராசரியாக மனிதனைப் போன்று இருக்கும்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Infraorder:
கடற்பாலூட்டி
குடும்பம்:
கங்கை டால்பின்கள்

John Edward Gray, 1846
பேரினம்:
கங்கை டால்பின்கள்

Wagler, 1830
இனம்:
P. gangetica
இருசொற் பெயரீடு
Platanista gangetica
(Lebeck, 1801); (Roxburgh, 1801)
துணையினம்

Platanista gangetica gangetica
Platanista gangetica minor

கங்கை நதி டால்பின் மற்றும்சிந்து நதி டால்பின் எல்லைப் பகுதிகள்

கங்கை ஆற்று ஓங்கில் இந்தியா, வங்கதேசம், நேபால் வழி பாயும் கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆறுகளிலும் அவற்றின் கிளை ஆறுகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. கங்கை ஓங்கில்கள் நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. மேலும் அவை பார்வையற்றவை.  தன் இரையை வேட்டையாட எதிரொலி இடமாக்கம் முறையை கையாளும். மீயொலியை வெளியிட்டு அவை எதிரொலித்து வருவதைக்கொண்டு எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்துகொள்ளும். பொதுவாக தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். தாயும் கன்றும் ஒன்றாகவே காணப்படும்.[6]

அச்சுறுத்தல்கள்

தொகு

மனிதத் தொடர்பு

தொகு

கங்கை ஆற்று ஓங்கில்களின் வாழ்விடம் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுள் ஒன்று. ஆற்றில் மீன்கள் அதிகம் உள்ள, நீர் மித வேகத்தில் பாயக்கூடிய பகுதிகளையே அவை விரும்பும். அத்தகைய இடங்களே மனிதர்கள் அதிகம் மீன் பிடிக்க ஏற்றது. இதனால் தவறுதலாக மீன்களுக்கு பதில் வலைகளில் சிக்கி உயிரிழக்கும் ஓங்கில்கள் அதிகம். மேலும் இவை எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.[6]

சுற்றுச்சூழல் மாசுபாடு

தொகு

தொழிற்சாலை, விவசாய, மற்றும் மனித மாசு அவற்றின் வாழ்விடம் சீரழிவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 9,000 டன் பூச்சிக்கொல்லிகள் மற்றும் 6 மில்லியன் டன் உரங்கள் ஆறு அருகே பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆற்று நீரை மாசுபடுத்தி அதில் வாழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றன. நீர் மாசுபாடு நேரடியாக இரை இனங்கள் மற்றும் ஓங்கில்களைக் கொல்ல முடியும், மற்றும் முற்றிலும் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Smith, B.D.; Braulik, G.T. (2012). "Platanista gangetica". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T41758A17355810. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T41758A17355810.en. http://www.iucnredlist.org/details/41758/0. பார்த்த நாள்: 29 August 2016. 
  2. A. Rus Hoelzel. Marine mammal biology: an evolutionary approach. Wiley-Blackwell, 2002. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  3. "Declaration of Gangetic Dolphin as National Aquatic Animal" (PDF). Government of India – Ministry of Environment, Forest and Climate Change. May 10, 2010. Archived from the original (PDF) on பிப்ரவரி 7, 2017. பார்க்கப்பட்ட நாள் October 23, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The Official Web Gateway to Pakistan". www.pakistan.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  5. "Gangetic river dolphin to be city animal of Guwahati". The Times of India. 6 June 2016. http://timesofindia.com/home/environment/flora-fauna/Gangetic-river-dolphin-to-be-city-animal-of-Guwahati/articleshow/52623206.cms. 
  6. 6.0 6.1 6.2 http://www.worldwildlife.org/species/ganges-river-dolphin
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னாசிய_ஆற்று_ஓங்கில்&oldid=3698034" இலிருந்து மீள்விக்கப்பட்டது