குல்சூம் அப்துல்லா

பாக்கித்தான் அமெரிக்க பளுதூக்கும் வீராங்கனை

குல்சூம் அப்துல்லா (Kulsoom Abdullah) பாகிக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் -அமெரிக்க பளுதூக்கும் வீராங்கனை ஆவார். 1976 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெற்றியாளர் போட்டியில் கலந்துகொண்டு போட்டியிட்ட போது பாகித்தான் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் பளுதூக்கும் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.[1] இதே ஆண்டில், போட்ட்டியில் கலந்து கொண்ட போது தனது மத அடையாளங்கள் எதையும் விலக்காமல் அவற்றை வைத்துக் கொண்டே போட்டியிட்டார். இவ்வாறு ஒலிம்பிக் விதிமுறைகளில் தளர்வு பெற்று தலை முக்காடுடன் கைகள் மற்றும் கால்களை மூடிக்கொண்டு போட்டியிட்ட முதல் பெண் என்ற வரலாற்றையும் இவர் உருவாக்கினார் சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பு இவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப தன் விதிகளில் மாற்றம் செய்து கொண்டது.[2]

குல்சூம் அப்துல்லா
Kulsoom Abdullah
பிறப்பு1976
கன்சாசு நகரம், மிசௌரி
தேசியம்பாக்கித்தானிய அமெரிக்கர்
பணிதரவு விஞ்ஞானி
அறியப்படுவதுஒலிம்பிக் பளுதூக்குதல்

சுயசரிதை தொகு

குல்சூம் அப்துல்லா அமெரிக்க நாட்டின் மிசௌரி மாநிலம் கன்சாசு நகரில் பிறந்தார். இளமையில் புளோரிடாவின் ஒகீக்கோபியில் வளர்ந்தார். வளர்ந்து வரும் போது அடிக்கடி பாகித்தானுக்குச் சென்று பாசுடோ மொழியில் பேசினார். [3] சியார்ச்சியா தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். [4] இவர் பட்டதாரி மாணவராக இருந்தபோது பளு தூக்குதல் விளையாட்டைத் தொடங்கினார். [5] இதற்கான பயிற்சி முறையாக இவர் டைக்குவாண்டோ விளையாட்டிலும் பயிற்சி பெற்றார். மிதமான ஆடையில் அமெரிக்க தேசிய பளுதூக்குதல் போட்டியில் போட்டியிட உரிமை மறுக்கப்பட்ட பிறகு, போட்டி அமைப்பாளர் அப்துல்லாவுக்கு ஒரு மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார். “அமெரிக்க பளுதூக்குதல் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பின் விதிகளால் நாங்கள் நிர்வகிக்கப்படுவதால், நாங்கள் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்ட்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே போட்டி உடையை மாற்றியமைக்கக் கோரும் உங்கள் கோரிக்கை, நிராகரிக்கப் பட்டது என்று அம்மின்னஞ்சல் கூறியது குல்சூம் அப்துல்லா சிவில் உரிமைகள் மற்றும் அரசு அமைப்புகளின் உதவியை நாடினார். தனியார் நிறுவனங்கள் என்பதால், அவர்களால் இவருக்கு உதவ முடியவில்லை. இவருக்காக அமெரிக்க-இசுலாமிய உறவுகள் மன்றம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அமெரிக்க தேசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான சவால் குறித்து இவர் தேசிய மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களில் இருந்து கவனத்தைப் பெற்றார். ஊடகத்தின் கவனம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலையீட்டிற்குப் பிறகு, போட்டி நடத்திய அமைப்பினர் இதை சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பின் (IWF) கவனத்திற்கு கொண்டு வர ஒப்புக் கொண்டனர். குல்சூம் அப்துல்லா [6] தனது மத அடையாளங்களை விட்டுக் கொடுக்காத முசுலீம்களின் அடக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் உடைகளை அணிந்து கொள்வது பற்றியும் அதே நேரத்தில் போட்டி அதிகாரிகளுக்கு தெளிவான அழைப்புகளைச் செய்ய அனுமதிப்பார் என்றும் எந்தவொரு போட்டி நன்மையைப் பெறுவதற்கான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை என்றும் உறுதி கூறி ஆடை விருப்பங்களை விவரித்தார். அப்துல்லா தனது தலை, கைகள் மற்றும் கால்களை மூடிக்கொண்டு விதிகளைத் தாண்டி போட்டியிட அனுமதிக்கப்பட்டது. [7] 2011 ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்ட ஒரு கட்டுரையில், நான்சி ஆக்சு எட்மேக்கர், "உலகில், அனைத்து போட்டியாளர்களிடமும் அவர்களின் மத அல்லது தனிப்பட்ட அளவு அடக்கம் எதுவாக இருந்தாலும், சிறந்த ஆடைகளை எப்படி கொண்டு வருவது என்று யோசிப்போம். இது ஒரு அழகுப் போட்டி அல்ல, மத லிட்மசு சோதனையும் அல்ல என்றார். [8] சர்வதேச விதிகள் முதலில் போட்டியாளர்களின் கைகளும் கால்களும் வெறுமனே இருக்க வேண்டும் என்றது. இதனால் ஒரு பளுதூக்கல் எப்போது வெற்றிகரமாக இருந்தது என்பதை நீதிபதிகளால் துல்லியமாக தீர்மானிக்க முடியும். [8]என்று கூறியது.

தி பாக்கித்தான் போர் என்ற ஆவணப்படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படம் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நான்கு அந்நியர்கள் என்ற ஆவணப்படமாக வெளியிடப்பட்டடது. இந்த படத்தில் அரீம் அக்மத், சபர் ஃபென்சர், நதியா மஞ்சூர், ஸ்டாண்ட்-அப் காமிக் மற்றும் சமையல்காரர் பாத்திமா அலி ஆகியோரும் நடித்து உள்ளனர் . [9]

மேற்கோள்கள் தொகு

  1. Kulsoom Abdullah Crossfit Journal 2011. Retrieved 11 September 2014
  2. "Muslim woman Kulsoom Abdullah makes history at weightlifting event - ESPN". Espn.go.com. 2011-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-09-11.
  3. Magazine, Brown Girl (2014-11-03). "Brown Girl of the Month: Kulsoom Abdullah is the First Female Pakistani-American Hijabi Weight Lifter". Brown Girl Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  4. "Kulsoom Abdullah - Atlanta Code Camp 2018". www.atlantacodecamp.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  5. Saber, Latifa. "Strong, Athletic and Breaking Records: Meet Kulsoom Abdullah, a Pakistan-American Olympic Weightlifter". My Salaam (in english). Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. put together a 43 page presentation
  7. "Female Muslim weightlifter competes in covering". ESPN.com. 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
  8. 8.0 8.1 msnbc.com, Kari Huus Reporter (2011-06-30). "Muslim weightlifter fights to compete, hijabi-style". msnbc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  9. Magazine, Brown Girl (2014-05-12). "The Pakistan Four". Brown Girl Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்சூம்_அப்துல்லா&oldid=3707839" இலிருந்து மீள்விக்கப்பட்டது