குல்தீப் சிங் ரத்தோர்

இந்திய அரசியல்வாதி


குல்தீப் சிங் ரத்தோர் (Kuldeep Singh Rathore) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இமாச்சல பிரதேசத்தின் சிம்லா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தியோக்கு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினராக உள்ளார்.[1]

குல்தீப் சிங் ரத்தோர்
Kuldeep Singh Rathore
MLA, இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2022
முன்னையவர்இராக்கேசு சிங்கா
தொகுதிதியோக்கு சட்டமன்றம்
அகில இந்திய காங்கிரசு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்.
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
இமாச்சலப் பிரதேச காங்கிரசு செயற்குழுவின் தலைவர்.
பதவியில்
2019–2021
முன்னையவர்சுக்விந்தர் சிங் சுகு
பின்னவர்பிரதிபா சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி

2019 முதல் 2021 ஆம் ஆன்டு வரை இமாச்சலப் பிரதேச காங்கிரசு செயற்குழுவின் தலைவராக இருந்தார்.[2]

2022 ஆம் ஆண்டில் இல் குல்தீப் சிங் ரத்தோர் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரசின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் சர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். காங்கிரசில் பலம் பெற்றிருந்த ரத்தோர் 1981 முதல் 1987 ஆம் ஆண்டு வரை கட்சியின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், இளைஞர் காங்கிரசின் மாநிலப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 2017 ஆம் ஆண்டு கட்சியின் வித்யா இசுடோக்சு தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து இவர் தியோக்கு சட்டமன்றப் பிரிவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சீட்டுக்கான போட்டியில் இருந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuldeep Singh Rathore wins theog". Economic Times.
  2. "Kuldeep Singh Rathore appointed new HPCC chief". India Today.
  3. "Kuldeep Singh Rathore appointed aicc spokesperson". The Tribune.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_சிங்_ரத்தோர்&oldid=3620991" இலிருந்து மீள்விக்கப்பட்டது