குளமாவு அணை
கேரளத்தின் இடுக்கி மாவட்ட அணை
குளமாவு அணை (Kulamavu Dam) என்பது பெரியாறு ஆற்றின் ஈர்ப்பு / கொத்து அணை ஆகும். இது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள இடுக்கி நீர் மின் ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய மூன்று அணைகளில் ஒன்றாகும். [1] இந்த அணையானது தொடுபுழா - புலியன்மலா மாநில நெடுஞ்சாலை ( எஸ்.எச்-33 ), 23 இல் இமைந்துள்ளது. இது இடுக்கி அணையிலிருந்து, 22 கி.மீட்டர் தொலைவிலும், செறுதோணி அணையிலிருந்து 22 கி.மீ. (14 மை) தொலைவிலும், தொடுபுழாவிலிருந்து 38 கி.மீ (24 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.
குளமாவு அணை | |
---|---|
குலமாவு அணை நீர்த்தேக்கம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கேரளம், இடுக்கி, குலமாவு |
புவியியல் ஆள்கூற்று | 9°48′10.59″N 76°53′46″E / 9.8029417°N 76.89611°E |
நோக்கம் | நீர்மின் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 30 ஏப்ரல் 1969 |
திறந்தது | பெப்ரவரி 1977 |
உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு, கொத்து |
தடுக்கப்படும் ஆறு | பெரியாறு |
உயரம் (அடித்தளம்) | 100 m (328 அடி) |
நீளம் | 385 m (1,263 அடி) |
அகலம் (உச்சி) | 220 அடி (67 m) |
கொள் அளவு | 620,300 m3 (811,300 cu yd) |
வழிகால் வகை | UG |
வழிகால் அளவு | 1,600 m3/s (57,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
நீர்ப்பிடிப்பு பகுதி | 38 கிமீ2 |
இயல்பான ஏற்றம் | 2,500 அடி (760 m) |
சுழலிகள் | 6 x 130 MW Pelton-type |
நிறுவப்பட்ட திறன் | 780 MW |
இடுக்கி, செறுதோணி மற்றும் குலமாவு அணைகள் 33 சதுர கிமீ. பரப்பளவில் உள்ளன. இந்த மூன்று அணைகளின் கட்டுமானமானது 60 கிமீ² செயற்கை ஏரியை உருவாக்குகிறது. இதில் சேமிக்கப்படும் நீரானது மூலமட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது .
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "Dam" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2015-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150819084557/http://idukki.nic.in/dam-hist.htm.
வெளி இணைப்புகள்
தொகு- குலமாவு (இபி) அணை தரவு பரணிடப்பட்டது 2018-04-19 at the வந்தவழி இயந்திரம்