குளிமாவு குகைக் கோவில்
ஹுளிமாவு குகைக் கோவில்[1], ஹுளிமாவு சிவன் குகைக் கோவில் அல்லது எளிமையாக குகைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹுளிமாவு குகைக் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கர்நாடகா |
மாவட்டம்: | பெங்களூரு |
அமைவு: | பன்னேர்கட்டா சாலை, ஹூளிமாவு |
ஆள்கூறுகள்: | 12°52′37″N 77°35′59″E / 12.877009°N 77.59967°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | ஸ்ரீ ஸ்ரீ பாலகங்கதரசுவாமி மடம் |
திறந்திருக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை மாலை 17:00 மணி முதல் இரவு 19:30 மணி வரை அனைத்து நாட்களிலும் (திங்கள்-ஞாயிறு) |
அமைவிடம்
தொகுஇந்த ஹுளிமாவு குகைக் கோவில், கர்நாடகா, பன்னர்கட்டா சாலையில், பிஜிஎஸ் நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்குகைக்கோவில் ஸ்ரீ ஸ்ரீ பால கங்காதரசுவாமி மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஸ்ரீ ராமானந்த சுவாமிஜி என்ற துறவி பல ஆண்டுகளாக இக்குகையில் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது, அவரது சமாதியும் இதனுள்ளே காணப்படுகிறது.
கோவில்
தொகுஉள்ளே மூன்று முக்கிய தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன. நடுவில் ஒரு சிவலிங்கமும், ஒருபுறம் தேவி சிலையும், மறுபுறம் விநாயகர் சிலையும் நிறுவப்பட்டுள்ளன. குகையின் மறுபுறம் மிகவும் பழமையான தியான மண்டபம் காணப்படுகிறது.
தொன்மை
தொகுஇந்தக் குகை 2000 ஆண்டுகள் தொன்மையான ஒற்றை பாறை குகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இக்கோவில் பாறைகளுக்கிடையே உள்ள இயற்கையான குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் விரிவான வரலாறு கிடைக்கவில்லை, ஆனால் ஸ்ரீ ஸ்ரீ பாலகங்காதரஸ்வாமி அவர்களால் நிறுவப்பட்ட கோவில் நாலு முதல் ஐந்து நூற்றாண்டுகள் தொன்மையானது என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
பார்வையாளர்கள்
தொகுகுகைக்குள் இருக்கும் ஒவ்வொரு தெய்வங்களையும் சுற்றி வர பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். துறவியின் புகைப்படத்துடன் கூடிய சமாதியும் உள்ளது. இவ்வாறான கோவில்கள் விளம்பரம் பெறவில்லை என்பதற்கான காரணங்களை அறியமுடியவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hulimavu Cave Temple" இம் மூலத்தில் இருந்து 28 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528185407/http://archive.deccanherald.com/deccanherald/july03/metro10.asp.
- ↑ "Archaeological Survey of India" இம் மூலத்தில் இருந்து 28 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528185407/http://archive.deccanherald.com/deccanherald/july03/metro10.asp.