குளோரிக் அமிலம்

வேதியியல் சேர்மம்

குளோரிக் அமிலம் (Chloric acid) என்பது HClO3என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இது குளோரினுடைய ஆக்சோ அமிலமாகவும் , குளோரின் உப்புகள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாகவும் இருக்கிறது. pKa ≈ −1 என்ற அமிலத்தன்மை எண் கொண்ட வலிமையான அமிலமான இச்சேர்மம் ஒரு ஆக்சிசனேற்றியாகவும் செயல்படுகிறது.

குளோரிக் அமிலம்
Chloric acid
குளோரிக் அமிலம்
Chloric acid
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரிக்(V) அமிலம்
இனங்காட்டிகள்
7790-93-4
ChemSpider 18513
InChI
  • InChI=1/ClHO3/c2-1(3)4/h(H,2,3,4)
    Key: XTEGARKTQYYJKE-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=Cl(=O)O
பண்புகள்
HClO3
வாய்ப்பாட்டு எடை 84.45914 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற கரைசல்
அடர்த்தி 1 கி/மி.லி, கரைசல் (தோரயமாக)
>40 கி/100 மி.லி (20 °செ)
காடித்தன்மை எண் (pKa) ca. −1
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி,அரிப்புத்தன்மை உடையது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமிக் அமிலம்
அயோடிக் அமிலம்
ஏனைய நேர் மின்அயனிகள் அமோனியம் குளோரேட்டு
சோடியம் குளோரேட்டு
பொட்டாசியம் குளோரேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் ஐதரோ குளோரிக் அமிலம்
ஐப்போகுளோரசமிலம்
குளோரசமிலம்
பெர்குளோரிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெப்ப இயக்கவியலில் குளோரிக் அமிலம் நிலைப்புத்தன்மை அற்றது என அதனுடைய விகிதச்சமமாதலின்மை தெரிவிக்கிறது.

தோராயமாக 30 சதவீதச் செறிவுள்ள குளிர்ந்த நீர்த்த கரைசலில் குளோரிக் அமிலம் நிலைப்புத்தன்மையுடன் இருக்கிறது. எச்சரிக்கையுடன் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் இதை ஆவியாக்கினால் 40 சதவீதம் செறிவுள்ள கரைசலைத் தயாரிக்கமுடியும். இவ்விருவகையான் செறிவுக் கரைசல்களும் சிதவடைதலுக்கு உட்பட்டு பல்வகையான பொருட்களைத் தருகின்றன.

8HClO3 → 4HClO4 + 2H2O + 2Cl2 + 3 O2
3HClO3 → HClO4 + H2O + 2 ClO2

தீங்குகள் தொகு

குளோரிக் அமிலம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் செயல்படுகிறது. பெரும்பாலான உயினப்பொருட்களும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களும் இச்சேர்மத்தில் படநேர்ந்தால் அவற்றை எரித்து பொசுக்கிவிடும் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.

தயாரிப்பு தொகு

கந்தக அமிலத்துடன் பேரியம் குளோரேட்டை சேர்த்து வினைப்படுத்தினால் குளோரிக் அமிலத்தைத் தயாரிக்கலாம். இவ்வினையில் கரையாமல் நிற்கும் பேரியம் சல்பேட்டை வீழ்படிவாக்குதல் முறையில் நீக்கலாம்.

Ba(ClO3)2 + H2SO4 → 2HClO3 + BaSO4

ஐப்போ குளோரசு அமிலத்தைச் சூடுபடுத்தி குளோரிக் அமிலமும் ஐதரசன் குளோரைடையும் பெறுவது மற்றொரு வகையானத் தயாரிப்பு முறையாகும்.

3HClO → HClO3 + 2 HCl

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரிக்_அமிலம்&oldid=2747116" இலிருந்து மீள்விக்கப்பட்டது