குளோரோடிரைபுளோரோயெத்திலீன்
குளோரோடிரைபுளோரோயெத்திலீன் (Chlorotrifluoroethylene) என்பது CF2CClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு குளோரோபுளோரோகார்பன் வகைச் சேர்மமாகும். பொதுவாக கடுங்குளிர் பயன்பாடுகளில் இது ஒரு குளிர்பதனியாகப் பயன்படுத்தப்படுகிறது. குளோரோடிரைபுளோரோயெத்திலீன் சேர்மத்தில் ஒரு கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பு காணப்படுகிறது. எனவே இதனை பாலி குளோரோடிரைபுளோரோயெத்திலீன் சேர்மமாக பலபடியாக்க முடியும். அல்லது இணைபலபடியாக்கி நெகிழி குளோரோடிரைபுளோரோயெத்திலீன் சேர்ம்மாக மாற்ற முடியும். பாலி குளோரோடிரைபுளோரோயெத்திலீன் நியோபிலான் என்ற வர்த்தகப் பெயரால் குறிக்கப்படுகிறது. சப்பானின் தாய்கின் தொழில் நிறுவனம் தயாரிக்கிறது. மின்னசோட்டாவில் உள்ள 3 எம் நிறுவனம் கெல்-எப் என்ற வர்த்தக பெயரில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது[2].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-1,2,2-டிரைபுளோரோயீத்தேன்
| |||
வேறு பெயர்கள்
குளோரோடிரைபுளோரோயெத்திலீன்
| |||
இனங்காட்டிகள் | |||
79-38-9 | |||
ChemSpider | 6345 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6594 | ||
| |||
பண்புகள் | |||
C2ClF3 | |||
வாய்ப்பாட்டு எடை | 116.47 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
மணம் | ஈதர் மணம் | ||
அடர்த்தி | 1.54 கி/செ.மீ3;-60°செல்சியசுC | ||
உருகுநிலை | −158.2 °C (−252.8 °F; 115.0 K) | ||
கொதிநிலை | −27.8 °C (−18.0 °F; 245.3 K) | ||
4.01 கி/100 மி.லி | |||
கரைதிறன் | பென்சீன், குளோரோஃபார்ம் போன்றவற்றில் கரையும் | ||
-49.1•10−6செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.38 (0 °செல்சியசு) | ||
தீங்குகள் | |||
வெடிபொருள் வரம்புகள் | 24-40.3% | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
உற்பத்தி
தொகு1,1,2-டிரைகுளோரோ-1,2,2-டிரைபுளோரோயீத்தேனை மெத்தனாலில் உள்ள துத்தநாகத்தைப் பயன்படுத்தி குளோரின் நீக்கம் செய்து வர்த்தக முறையில் குளோரோடிரைபுளோரோயெத்திலீன் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் 1–10 மில்லியன் பவுண்டுகள் குளோரோடிரைபுளோரோயெத்திலீன் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). போகா ரேடான், புளோரிடா: CRC Press. pp. 3–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ Aetna Plastics Corp. - Products. Services ... Solutions, Aetna Plastics Corp., pp. PCTFE / Kel–F® / Neoflon®, archived from the original on 27 நவம்பர் 2022, பார்க்கப்பட்ட நாள் 3 February 2012