குளோர்டேன்

ˌ குளோர்டேன் (Chlordane) ஓர் பூச்சிக் கொல்லியாகும். 1947 ஆம் ஆண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டது. கரிமக் குளோரைடான இது ஒரு தொடு நஞ்சாகச் செயல்படுகிறது. டையீல்சு ஆல்டர் வினை வழியாக இதனைத் தயாரிக்கிறார்கள். ஏராளமான பகுதிக் கூறுகளை இச்சேர்மம் கொண்டிருக்கிறது. உருளைக் கிழங்கு, கோதுமை அல்லது காய்கறிகளின் விதைகளை பதப்படுத்துவதில் குளோர்டேன் பயன்படுத்தப்படுகிறது. எறும்பு, கரையான் ஆகியவற்றிடமிருந்து மரங்களைப் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். குளோர்டேன் மட்டுமே மெதுவாகச் சிதைவடைகிறது. எனவே நீண்ட தூரத்திற்கு அதை எளிதாகப் பரவச் செய்ய இயலும். பாலூட்டிகளிலும், விலங்குகளின் உடலிலும் இது பெரும்பாலும் நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரல் வழியாக ஊடுறுவுகிறது. சுண்டெலிகளில் இது புற்றுநோயை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. மனிதர்களிலும் புற்றுநோயை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. குளோர்டேன் நச்சுத் தன்மை உடையது ஆகும். இதுவொரு நிலையான கரிம மாசுபடுத்தி என்று சிடாக்கோம் மாநாட்டில் பட்டியலிடப்பட்டது.

குளோர்டேன்
Chlordane
குளோர்டேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்டாகுளோரோ-4,7-மெத்தனோ ஐதரோயிண்டேன்
வேறு பெயர்கள்
ஆர்த்தோ குளோர்டேன்
இனங்காட்டிகள்
57-74-9
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14176 Y
பப்கெம் 5993
  • ClC1CC2C(C1Cl)[C@@]3(Cl)C(=C(Cl)[C@@]2(Cl)C3(Cl)Cl)Cl
UNII A9RLM212CY Y
பண்புகள்
C10H6Cl8
வாய்ப்பாட்டு எடை 409.779 கி/மோல்
அடர்த்தி 1.60 கி/செ.மீ3
உருகுநிலை 106 °செல்சியசு
கொதிநிலை 175 °செல்சியசு 1 மி.மீ பாதரசத்தில்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–100, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோர்டேன்&oldid=2670100" இலிருந்து மீள்விக்கப்பட்டது