குழல் உமிழ்நீர்ச் சுரப்பி

குழல் உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Tubarial salivary gland) என்று அழைக்கப்படும் குழல் சுரப்பிகள் மனிதர்களில் காணப்படும் ஓர் இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் ஆகும். மனிதர்களில் நாசி குழிக்கும் தொண்டைக்கும் இடையில் இவை காணப்படும்.[1]

விளக்கம்

தொகு

குழல் உமிழ்நீர்ச் சுரப்பிகள் நாசிப்பகுதித் துருத்தம் மேலுள்ள உள்ள மூக்குத் தொண்டைக்குழாயின் பக்கவாட்டு சுவர்களில் காணப்படுகின்றன [2][1][3] இதன் காரணமாக இச்சுரப்பிகள் குழல் சுரப்பிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த உமிழ்நீர்ச் சுரப்பு முன்னிற்குஞ்சுரப்பி படல புரதத்துடன் இணைகின்றன. இதன் அடிப்படையிலே இந்த சுரப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.[4]

வரலாறு

தொகு

நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தில் இடச்சு விஞ்ஞானிகள் குழு ஒன்று பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்/வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவியினை பயன்படுத்தி 2020 செப்டம்பரில் இந்த சுரப்பிகளைக் கண்டுபிடித்தனர்.[3][5][6]

முக்கியத்துவம்

தொகு

கதிரியக்கச் சிகிச்சையில் குழாய் சுரப்பிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சுரப்பிகளின் கதிர்வீச்சைத் தவிர்ப்பது, வாய் வறட்சி போன்ற கதிர்வீச்சு சிகிச்சையின் பல பக்க விளைவுகளைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

சர்ச்சை

தொகு

இந்த உறுப்பு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கூற்று உடற்கூறியல் நிபுணர்களால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hunt, Katie; Rogers, Kristen (October 21, 2020). "Scientists discover possible new organ in the human throat". CNN. https://www.cnn.com/2020/10/21/health/new-organ-throat-scn-wellness/index.html. 
  2. Pacha, Aswathi (October 22, 2020). "New pair of salivary glands in humans discovered". The Hindu. https://www.thehindu.com/sci-tech/science/new-pair-of-salivary-glands-in-humans-discovered/article32915485.ece. 
  3. 3.0 3.1 Valstar, Matthijs H.; de Bakker, Bernadette S.; Steenbakkers, Roel J.H.M.; de Jong, Kees H.; Smit, Laura A.; Klein Nulent, Thomas J.W.; van Es, Robert J.J.; Hofland, Ingrid et al. (2020). "The tubarial salivary glands: A potential new organ at risk for radiotherapy". Radiotherapy and Oncology 154: 292–298. doi:10.1016/j.radonc.2020.09.034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0167-8140. பப்மெட்:32976871. 
  4. Pappas, Stephanie (20 October 2020). "Scientists discover new organ in the throat". livescience.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-06.
  5. Dockrill, Peter (20 October 2020). "Scientists Just Discovered a Mysterious Organ Lurking in The Centre of The Human Head". ScienceAlert.
  6. Netherlands Cancer Institute (October 16, 2020). "Cancer researchers discover new salivary gland". Medical Xpress.
  7. "Observations against the recent discovery of a new pair of salivary glands in humans".