குழித்துறை ஆறு

குழித்துறை தாமிரபரணி ஆறு கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜீவநதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, குழித்துறை வழியாக சுமார் 62 கி.மீ. தூரம் பாய்ந்து தேங்காப்பட்டணம் பகுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

வரலாறுதொகு

குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தோன்றி கோதையாறு, பறளியாறு, குற்றியாறு, சிற்றாறு ஆகியவை இணைந்து திருவட்டாறு அருகே மூவாற்று முகத்தில் இணைந்து தாமிரபரணியாக உருவாகி குமரி மாவட்டத்தை வளமாக்குகிறது.

குடிநீர்தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை குழித்துறை ஆறு தீர்க்கிறது. அதற்காக குழித்துறை நகராட்சி, பாகோடு, நல்லூர், உண்ணாமலைக்கடை, மெதுகும்மல் உட்பட மேற்கு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் பலவும் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகளை அமைத்துள்ளன. மேலும் குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம், கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் விளாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் போன்றவையும் தாமிரபரணி ஆற்றை நம்பியே செயல்படுகின்றன.

அழகியல் நிறைந்த ஆறுதொகு

குழித்துறை தாமிரபரணி ஆறானவது இரு புறமும் விவசாயம் மற்றும் மரம் செடிகளுடன் அழகாக காட்சிதரும். 1990 க்கு மேல் ஆற்றில் மணல் அள்ளினர். இதனால், ஆற்றின் ஆழம் அதிகரித்து அதன் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது.

 
குழித்துறை தாமிரபரணி ஆறு ஞறாம்விளை நேசமணி பாலத்தில்
 
குழித்துறை தாமிரபரணி ஆறு

பண்பாடு சார்ந்ததுதொகு

அப்பகுதியில் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்மம் நடத்துவதற்கு ஆடிமாதம் இறுதி அமாவாசை அன்று குழித்துறை ஆற்றின் இருபுறமும் மக்கள் கூடுவார்கள். இவ்வாறு கூடும் மக்களை கவரும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் வாவுபலி பொருட்காட்சி. வாவுபலியை ஆண்டுதோறும் குழித்துறை நகராட்சியால் சிறப்பாக நடத்தப்படுகிறது.

சான்றுகள்தொகு

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=398297

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழித்துறை_ஆறு&oldid=3699118" இருந்து மீள்விக்கப்பட்டது