குழ. செல்லையா

குழ. செல்லையா (சொல்லரசு என்றும் அழைக்கப்பட்டார்) (மறைவு: 23 நவம்பர் 2017) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியும், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.

குழ. செல்லையா
சட்டமன்ற உறுப்பினர்
பேராவூரணி
பதவியில்
15 மார்ச் 1971 – 31 சனவரி 1976
தொகுதிபேராவூரணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமுதுகாடு , பேராவூரணி தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅ.தி.மு.க
வாழிடம்(s)தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியவாதி மற்றும் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர்

இவர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியையடுத்த முதுகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] தொடக்கத்தில் திமுகவில் இருந்த இவர். 1971 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாததால் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், எம். ஜி. ஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதன் விண்ணப்பப் படிவத்தில் எம்ஜிஆர் முதலாவதாகவும், குழ. செல்லையா ஐந்தாவது நபராகவும் கையெழுத்திட்டார். பின்னர் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளராக இருந்தார். இடையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா காலமானார்". செய்தி. தினமணி. 24 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
  2. "அதிமுக தொடங்கியபோது எம்ஜிஆருடன் இருந்தவர்: முன்னாள் எம்எல்ஏ காலமானார்". செய்தி. இந்து தமிழ். 24 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழ._செல்லையா&oldid=3926588" இலிருந்து மீள்விக்கப்பட்டது