குவித்தேரியா

புனித குவித்தேரியா (எசுப்பானியம்: Quiteria; பிரெஞ்சு மொழி: Quitterie; போர்த்துக்கேய மொழி: Quitéria; தமிழ்: கித்தேரியம்மாள்) 2ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிறித்தவப் புனிதரும், கன்னியரும், மறைசாட்சியும் ஆவார். இவரின் வாழ்க்கையைப்பற்றி முழுவதும் தெரியவில்லை. இவர் ரோமை புனிதர்களின் பட்டியலில் (Roman Martyrology) இடம் பெறுகின்றார். இவரின் விழாநாள் மே 22 ஆகும்.

புனித குவித்தேரியா (அ) கித்தேரியம்மாள்
18ஆம் நூற்றாண்டு பிரேசிலிய ஓவியம்.
கன்னியர், இரத்த சாட்சி
இறப்பு2ஆம் நூற்றாண்டு
பாரம்பரியப்படி அயிர்-சோர்-அல்தோர்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை[1]
புனிதர் பட்டம்1716
முக்கிய திருத்தலங்கள்அயிர்-சோர்-அல்தோர்
கூத்தென்குழி
திருவிழாமே 22
சித்தரிக்கப்படும் வகைமறைசாட்சியரின் சின்னமான பனை ஓலையை ஏந்தியபடி; முன்னணியில் ஒரு நாய்யோடோ; கையில் தன் தலையை தாங்கியவாறோ சித்தரிக்கப்படுகிறார்,
பாதுகாவல்வெறிநாய்க்கடி நோய்;[2]

வீரமாமுனிவர் இவரைக் காவியத்தலைவியாகக் கொண்டு எழுதிய கித்தேரியம்மாள் அம்மானை என்னும் நூல் இவரின் வரலாற்றையும், இவர் கி.பி 1716 புனிதர் பட்டம் பெற்ற வரலாற்றையும் களமாகக் கொண்டுள்ளது. வீரமாமுனிவர் எழுதிய இந்நூல் திருநெல்வேலி மாவட்டத்தில் வங்க கரையோரம் அமைந்த கூத்தென்குழி எனும் கடற்கரை கிராமத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.[சான்று தேவை]

குவித்தேரியாவும் அவரின் சகோதரிகளும்

தொகு

போர்த்துகல் பாரம்பரியப்படி இவரின் சகோதரிகளான ஐமேலியா; லிபெறதா; ஜெமா; ஜெனீப்ரா; ஜெர்மானா; பசிலிசா; மரிக்கா; மற்றும் விடோரியா என்னும் சிறிய குழுவிற்கு தலைவியாக குவித்தேரியா இருந்தார் என்பர். இவர்கள் அனைவரும் ரோமில் இராணுவ அதிகாரியாக இருந்த ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஒன்பது குழந்தைகளாவர். ஒரு அடிமைப்பெண்னைப் போல ஒரே நேரத்தில் ஒன்பது மகள்களை பெற்றெடுத்ததால் வெறுப்படைந்த இவர்களின் தாய், இவர்களை ஒரு ஆற்றில் முக்கி கொல்ல வேலைக்காரிக்கு உத்தரவிட்டார். ஆனால் அவள் தலைவிக்கு கீழ்படியாமல், குழந்தைகளை சில உள்ளூர் பெண்களுக்கு தத்து கொடுத்தார். இவர்களது தந்தைக்கு இவர்களின் பிறப்பு செய்தி தெரியாமல் இருந்தது.

இவர்கள் வளர்ந்த பின்னர் ஒருமுறை ரோமானிய கடவுளர்களை வழிபாட மறுத்தனர். ஆகவே அவ்விடத்திற்கு அதிகாரியாக இருந்த தங்களின் தந்தையின், முன் கொண்டுவரப்பட்டனர். அவர்களைக்கண்ட உடனேயே அவர்களை தனது மகள்கள் என அவர் உணர்ந்தார். அவர்களின் தந்தை அவர்களை ரோம அதிகாரிகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவர்கள் அதற்கு இணங்க மறுத்ததால் அவர்களை ஒரு கோபுரத்தில் சிறைவைத்தார். எனினும், அவர்கள் அங்கிருந்து தப்பி, அங்கிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்தனர்.

பின்னர் இவர்கள் உரோமைப் பேரரசுக்கு எதிராக கரந்தடிப் போரில் ஈடுபட்டனர். இப்போரின் போது இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். குவித்தேரியா தலை வெட்டி கொல்லப்பட்டார்.

படக்காட்சியகம்

தொகு

புனித கித்தேரியம்மாள் ஆலயம் , கூத்தன்குழி

ஆதாரங்கள்

தொகு
  1. Ἡ Ἁγία Κουϊτερία ἡ Μάρτυς. 22 Μαΐου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  2. portcult.com

வெளி இணப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவித்தேரியா&oldid=3829923" இலிருந்து மீள்விக்கப்பட்டது