குவெம்பு

சாகித்திய அகாதமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர்
(குவேம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2] புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் கதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.

குவெம்பு
பிறப்புகுப்பளி வெங்கடப்ப புட்டப்பா
(1904-12-29)29 திசம்பர் 1904
இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்கமகளூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு11 நவம்பர் 1994(1994-11-11) (அகவை 89)
மைசூர், கருநாடகம்
புனைபெயர்குவேம்பு
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
தேசியம்இந்தியர்
வகைபுனைவு
இலக்கிய இயக்கம்நவோதயா
இணையதளம்
http://www.kuvempu.com/

வாழ்க்கை வரலாறு

தொகு

இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.[3] இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.[3][4] இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.

பின்னர், பெங்களூர் மத்திய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Gentle Radiance of a Luminous Lamp". Ramakrishna Math. Archived from the original on 2006-08-22. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  2. "Jnanapeeth Awards". Ekavi. Archived from the original on 2006-04-27. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.
  3. 3.0 3.1 Rao, L. S. Sheshagiri (2012). Kuvempu. Sapna Book House Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788128017933. பார்க்கப்பட்ட நாள் 29 December 2017.
  4. "After burglary, Kuvempu museum steps up security". The Hindu. 25 November 2015. http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece. 
  5. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  7. 7.0 7.1 7.2 7.3 "Culture p484-485" (PDF). A Handbook of Karnataka. Government of Karnataka. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெம்பு&oldid=3771811" இலிருந்து மீள்விக்கப்பட்டது