குஸ்தி (2006 திரைப்படம்)

குஸ்தி (Kusthi) ராஜ் கபூர் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். பிரபு, கார்த்திக், வடிவேலு, புளோரா, விஜயகுமார், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். ஞானசுந்தரி தயாரிப்பில், டி. இமான் இசை அமைப்பில், 23 ஜூன் 2006 ஆம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் ஒரு சராசரி வெற்றிப் படமாக அமைந்தது.[1][2]

நடிகர்கள்தொகு

பிரபு, கார்த்திக், வடிவேலு, புளோரா, விஜயகுமார், ராதாரவி, ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, ராஜ் கபூர், சித்ரா லக்ஷ்மணன், மனோபாலா, டி. பி. கஜேந்திரன், மதன் பாப், சிட்டி பாபு, பாலு ஆனந்த், லதா, சபிதா ஆனந்த், ஆர்த்தி, விஜயன், பெசன்ட் ரவி, தளபதி தினேஷ், கிரேன் மனோகர்.

கதைச்சுருக்கம்தொகு

நாட்டாமையின் (ராதாரவி) மகளை திருமணம் செய்ய பயந்து, ஊரை விட்டு சென்னைக்கு ஓடும் ஜீவா (பிரபு), தன் நண்பன் வேலுவுடன் (வடிவேலு) இணைகிறான். அந்நிலையில், சில உள்ளூர் அடியாட்களிடமிருந்து ஒரு நபரை (மகாநதி ஷங்கர்) காப்பாற்றுகிறான் ஜீவா. அந்த காப்பாற்றப்பட்ட நபர், ரவுடி சிங்கத்திற்கு (கார்த்திக்) மிகவும் வேண்டப்பட்ட ஆள். பின்னர், சிங்கத்தை அபியும், ஜீவாவை திவ்யாவும் காதல் செய்கிறார்கள். சிங்கத்திற்கு மற்றொரு ரவுடிக்கும் (ராஜ் கபூர்) பணப் பிரச்சனை இருக்கிறது.

அதே சமயம், ஜீவாவை தேடி சென்னைக்கு ஆட்களுடன் வருகிறார் நாட்டாமை. மருத்துவமனையில், ஜீவாவை காணாமல்போன பேரன் என்று தவறாக அடையாளம் காணுகிறார் லட்சுமியின் (லதா) தந்தை (விஜயகுமார்). நாட்டாமையிடம் இருந்து தப்பிக்க, லதாவுடன் ஊட்டிக்குச் செல்கிறான் ஜீவா.

அபி மற்றும் திவ்யாவின் தாத்தா திவ்யா-ஜீவா அபி-சிங்கம் ஆகிய இரு ஜோடிகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால், அதை தடுத்து நிறுத்த ராஜ் கபூரும், நாட்டாமையும் வந்துவிடுகிறார்கள். அவர்களை சமாளித்து எவ்வாறு திருமணம் நடந்தது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவுதொகு

டி. இமான் இப்படத்தின் இசை அமைப்பாளர் ஆவார். பா. விஜய் , ஸ்நேஹன், பழனிபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.[3]

வரவேற்புதொகு

கதாபாத்திரங்கள் நீளமான வசனங்களை பேசியதாகவும், இசையும் இயக்கமும் பெரியதாக எடுபடவில்லை என்றும், முன்பாதி ஒரு மலையாள படம் போலவும், பின்பாதி ஒரு தெலுங்கு படம் போலவும் இருப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.[2][4][5]

மேற்கொள்கள்தொகு

வெளி-இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஸ்தி_(2006_திரைப்படம்)&oldid=2701479" இருந்து மீள்விக்கப்பட்டது