கு. சிவராமன்

கு. சிவராமன் (G. Sivaraman) தமிழகத்தை சார்ந்த ஒரு சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழக மக்களுக்கு உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்.[சான்று தேவை]

கல்வி

தொகு

சித்த மருத்துவர் கு. சிவராமன் நெல்லையில் அமைந்துள்ள தமிழக அரசின் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையில் தனது சித்த மருத்துவ படிப்பை (B.S.M.S) 1993இல் முடித்தார். 1990 ஆம் ஆண்டில் தஞ்சை சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைசுவடிகள் வாசிப்பு பயிற்சியில் சான்றிதழ் பயிற்சி பெற்றார். 2004 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.

சிற்றிதழ் மற்றும் கட்டுரைகள்

தொகு

இவர் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் கீழ் வெளிவரும் பூவுலகு என்ற சிற்றிதழின் ஆசிரியராக செயல்படுகிறார்.

இவர் இயற்றிய கட்டுரைகள் ஆனந்தவிகடன்[1] , புதியதலைமுறை[2] , குமுதம் , குங்குமம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளது.

இயற்றிய நூல்கள்[3]

தொகு
  • 2003 - வாழ்க வளமுடன்
  • 2009 - அழகும் ஆரோக்கியமும்
  • 2010 - ஏழாம் சுவை
  • 2011 - எது சிறந்த உணவு
  • 2012 - மருந்தென வேண்டாவாம்
  • 2013 - நறுமணமூட்டிகள்
  • 2013 - ஆறாம் திணை -பாகம் 1
  • 2013 - ஆறாம்திணை - பாகம் 2
  • 2014 - நலம் 360*
  • 2014 - சுற்றமும் சூழலிலும் நட்பும்
  • 2015 - அஞ்சறை பெட்டியும் அறுசுவையும்
  • 2016 - நாட்டுமருந்து கடை
  • 2016 - உயிர்பிழை
  • 2017 - நல்உணவும் நல்வாழ்வும்
  • 2017 - உயிர்மெய்

பதவிகள் மற்றும் அங்கீகாரங்கள்

தொகு

2001 முதல் 2010 வரை ஹெல்த் இந்தியா என்ற தன்னாார்வ அமைப்பின் இணை இயக்குநராக செயல்பட்டார்.

2010 முதல் ஆரோக்கியா சித்த மருத்துவமனை சென்னையின் தலைமை மருத்துவராக உள்ளார்.[4]

2020 ஏப்ரலில் தமிழக அரசு கொரானா நோய் தடுப்பு பணிக்காக நியமித்த நோய்தடுப்பு குழுவின் 25 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.

கருத்தரங்க உரைகள்

தொகு

சித்த மருத்துவம் மற்றும் மரபு உணவு சார்ந்து வெளிநாடுகளில் உள்ள டொரண்டோ பல்கலைகழகம், சிட்னி பல்கலைகழகம், மலயா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைகழகங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வு உரை நிகழ்த்தியுள்ளார்.[சான்று தேவை]

விருதுகள்

தொகு
  • சிறந்த எழுத்தாளர் விருது 2013 - சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சங்கம்
  • சிறந்த மருத்துவர் விருது 2012 - தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவ பல்கலைகழகம்
  • தமிழகத்தின் சிறந்த பத்து மனிதர்கள் விருது 2014 - ஆனந்த விகடன் குழுமம்.[5]
  • எழுத்தாளர் சுஜாதா சிற்றிதழ் விருது - 2010 - உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை
  • 2004 - தமிழக அரசின் சிறந்த புத்தக்திற்கான விருது (வாங்க வாழலாம் புத்தகம்)

சான்றுகள்

தொகு
  1. ஆனந்தவிகடன். ஆனந்தவிகடன். https://www.vikatan.com/health/healthy/siddha-treatments-are-not-just-medicines-says-doctor-k-sivaraman. 
  2. "புதிய தலைமுறை இதழ்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "தி இந்து தமிழ் நாளிதழ்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Arogya Siddha Hospital | Arogya Health Care". www.arogyahealthcare.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  5. Correspondent, Vikatan. "2014 டாப் 10 மனிதர்கள்". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சிவராமன்&oldid=3479879" இலிருந்து மீள்விக்கப்பட்டது