கூகுள் கோட் ஜாம்
கூகுள் கோட் ஜாம் (Google Code Jam) என்பது ஒரு பன்னாட்டு நிரலாக்கப் போட்டியாகும். இது கூகுள் நிறுவனத்தால் வழங்கவும் நிர்வகிக்கவும் படுகிறது.[2] இந்த போட்டி 2003 இல் தொடங்கப்பட்டது.[3] போட்டியானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்கப்பட வேண்டிய படிமுறைக் கேள்விகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. போட்டியாளர்கள் தங்கள் தீர்வுகளைப் பெற எந்த நிரலாக்க மொழியையும், நிரலாக்கத் தளத்தையும் பயன்படுத்தலாம். 2003 முதல் 2007 வரை, கூகுள் கோட் ஜாம் டாப்கோடரின் இயங்குதளத்தில் நடத்தப்பட்டது . 2008 ஆம் ஆண்டு முதல் போட்டிக்காக தங்களின் சொந்த பிரத்யேக உள்கட்டமைப்பை கூகுள் பயன்படுத்துகிறது .
கூகுள் கோட் ஜாம் | |
---|---|
நிகழ்நிலை | செயலில் |
காலப்பகுதி | ஆண்டுதோறும் |
நிகழ்விடம் | இணையம் |
நாடு | உலகம் முழுவதும் |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 2003- |
துவக்கம் | 2003 |
வருகைப்பதிவு | 35,500 (2019)[1] |
புரவலர்கள் | கூகிள் |
வலைத்தளம் | |
https://codingcompetitions.withgoogle.com/codejam |
2015 மற்றும் 2018[4] க்கு இடையில், விநியோகிக்கப்பட்ட படி முறைகளை மையமாகக் கொண்டு, கூகிள் 'டிஸ்ட்ரிபூடட் கோட் ஜாம்'ஐ நடத்தியது. [5] இந்த போட்டி அதற்கான தனியான தகுதி மற்றும் இறுதிச் சுற்றுகளுடன் நடத்தப்பட்டது. $10,000 முதல் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால் கோட் ஜாமின் 2வது சுற்றுக்கு (3000 பேர் வரை) தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
பல கூகுள் கோட் ஜாம் போட்டி கேள்விகள் கல்வி ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. [6]
கடந்த வெற்றியாளர்கள் தொகு
டிஸ்ட்ரிபூடட் கோட் ஜாம் தொகு
போட்டி | இறுதிப் சுற்று நடந்த இடம் | போட்டியாளர்கள் | 1வது இடம் | 2வது இடம் | 3வது இடம் |
---|---|---|---|---|---|
2018 | டொராண்டோ, கனடா | ? | மடேயூஸ் ராடெக்கி | கெவின் அதியென்சா | டொமெக் கிசாஜ்கா |
2017 | டப்ளின், அயர்லாந்து | 3,000 | ஆண்ட்ரூ அவர் | எவ்ஜெனி கபூன் | எரிக்-ஜான் கிரிஜ்ஸ்மேன் |
2016 | நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா | 3,000 | புரூஸ் மெர்ரி | யுசௌ கு | பிலிப் ஹலாசெக் |
2015 | சியாட்டில், வாஷிங்டன், அமெரிக்கா | 3,000 | புரூஸ் மெர்ரி | மார்சின் ஸ்முலேவிச் | டிங் வெய் சென் |
நாடு வாரியாக முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Qualification Round 2019 Round Overview". 2019-04-07. https://codingcompetitions.withgoogle.com/codejam/round/0000000000051705.
- ↑ Dyer, J.; Gregersen, H.; Christensen, C.M. (2011). The Innovator's DNA: Mastering the Five Skills of Disruptive Innovators. Harvard Business Review Press. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4221-4271-4. https://archive.org/details/innovatorsdnamas0000dyer. பார்த்த நாள்: 30 July 2018.
- ↑ Lowe, J. (2009). Google Speaks: Secrets of the World's Greatest Billionaire Entrepreneurs, Sergey Brin and Larry Page. Wiley. பக். 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-50124-5. https://archive.org/details/googlespeakssecr0000lowe. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "FAQ - Code Jam". 2019-04-07. https://codingcompetitions.withgoogle.com/codejam/faq. "This year we won't be offering a Distributed Code Jam track, allowing us to focus our attention on evolving our coding competitions and improving the contestant experience."
- ↑ Ghoshal, Abhimanyu (11 March 2015). "Registration for Google's Code Jam 2015 is Now Open". https://thenextweb.com/google/2015/03/11/googles-code-jam-2015-features-a-new-competition-track-for-distributed-computations/.
- ↑ Dymchenko, Sergii; Mykhailova, Mariia (2015). "Declaratively solving tricky google code jam problems with prolog-based ECLiPSe CLP system". Proceedings of the 30th Annual ACM Symposium on Applied Computing: 2122–2124. doi:10.1145/2695664.2696032. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4503-3196-8. https://dl.acm.org/citation.cfm?id=2696032. பார்த்த நாள்: 4 August 2018.
- https://code.google.com/codejam/contest/7214486/scoreboard பரணிடப்பட்டது 2015-12-03 at the வந்தவழி இயந்திரம்
- https://code.google.com/codejam/contest/2437491/scoreboard?c=2437491 பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
- Vance, C.M.; Paik, Y. (2015). Managing a Global Workforce. Taylor & Francis. பக். 180 ff. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-51661-3. https://books.google.com/books?id=D5WsBwAAQBAJ&pg=PA180. பார்த்த நாள்: 30 July 2018.
- Foley, S.N.; Gollmann, D.; Snekkenes, E. (2017). Computer Security â€" ESORICS 2017: 22nd European Symposium on Research in Computer Security, Oslo, Norway, September 11-15, 2017, Proceedings. Lecture Notes in Computer Science. Springer International Publishing. பக். 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-66399-9. https://books.google.com/books?id=waUzDwAAQBAJ&pg=PA291. பார்த்த நாள்: 5 August 2018.