கூகுள் நிகழ்படங்கள்
கூகுள் நிகழ்படங்கள் அல்லது கூகுள் வீடியோ (Google Video) என்பது ஓர் இலவச நிகழ்படச் சேவை வழங்கியாகும். இது முதலில் சனவரி 25, 2005இல் கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.[1]
வலைத்தள வகை | நிகழ்படப் பகிர்வு |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பல மொழிகளில் |
உரிமையாளர் | கூகுள் இன்க் |
உருவாக்கியவர் | கூகுள் |
பதிவு செய்தல் | no (required to upload) |
உரலி | video.google.com |
ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிரல் எழுத்துப்படிகளைத் தேடுவதில் கவனம் செலுத்தியது. பின்னர், கூகுள் சேவையகங்களில் நிகழ்படத் துணுக்குகளை வழங்குவதற்கும் யூடியூப் போன்ற பிற வலைத்தளங்களில் உட்பொதிப்பதற்கும் அனுமதி வழங்கியது.[2][3]
கூகுள், யூடியூப்பைக் கையகப்படுத்தியதன் மூலம், புதிய நிகழ்படப் பதிவேற்றங்கள் 2009 இல் நிறுத்தப்பட்டன. இறுதியில் இந்தச் சேவை ஆகத்து 20,2012 முதல் நிறுத்தப்பட்டது.[4][5]
நிகழ்படப் பொருளடக்கம்
தொகுஇலவசமாகத் தேடக்கூடிய நிகழ்படத்திற்கான பெரிய காப்பகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கூகுள் நிகழ்படங்கள் உருவாக்கப்பட்டது. தொழில்முறையற்ற ஊடகங்கள், இணைய நிகழ்படங்கள், தொற்று விளம்பரங்கள், திரைப்பட முன்னோட்டங்கள் தவிர, தொலைக்காட்சி உள்ளடக்கம், திரைப்படங்கள் போன்ற வணிக தொழில்முறை ஊடகங்களை விநியோகிப்பதையும் இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டது.
கூகுள் நிருவன ஊழியர்களின் பல கல்விச் சொற்பொழிவுகள் பதிவு செய்யப்பட்டு இதன் மூலமாக இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. விரிவுரைகள் முக்கியமாக, ஊழியர்கள் படித்த முன்னாள் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டன. கூகுள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
நிகழ்படப் பதிவேற்றம்
தொகுகூகுள் நிகழ்படங்கள், இலவச மற்றும் கட்டணச் சேவைகளை வழங்கியது.
நிகழ்படப் பதிவேற்றம்
தொகு2009 வரை, பயனர்கள் கூகுள் நிகழ்பட வலைத்தளத்தின் மூலம் நிகழ்படங்களைப் பதிவேற்ற முடிந்தது. (அதிகபட்சமாக ஒரு கோப்புக்கு 100 எம்பி வரை) விண்டோஸ், மேக் ஓஎஸ் எக்ஸ் மற்றும் லினக்ஸ் ஆகியவற்றிற்கு கிடைக்கும் கூகுள் வீடியோ பதிவேற்றம் (கூகுள் வீடியோ அப்லோடர்) மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.
நிகழ்படப் பதிவேற்றப் பயன்பாடு மூன்று தனித்தனி பதிவிறக்கங்களாகக் கிடைத்தாலும், லினக்சுப் பதிப்பிற்கு ஜாவா மொழியில் எழுதப்பட்ட குறுக்கு-தள நிரலாக்க மொழியாகும். ஜாவா இயக்க நேர சூழல் (JRE) நிறுவப்பட்டிருப்பதால் எந்தவித மாறுபாடுகளும் செய்யாமல் மற்ற இயங்குத்களங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் விளைவாக, யூ. எஸ். பி ஃபிளாஷ் டிரைவ்கள், சிடி-ரோம்கள் அல்லது குமுக சேமிப்பு போன்ற அகற்றக்கூடிய ஊடகங்களிலிருந்தும் இதை இயக்க முடியும்.
கூகுள் நிகழ்பட இயக்கி
தொகுஉருவாக்குனர் | கூகுள் |
---|---|
அண்மை வெளியீடு | 2.0.0.060608 / 2006-08-22 |
இயக்கு முறைமை | Mac OS X, விண்டோசு |
மென்பொருள் வகைமை | நிகழ்பட இயக்கி |
உரிமம் | Freeware |
கூகுள் நிகழ்பட இயக்கி என்பது கூகுள் நிகழ்படங்களைப் பார்ப்பதற்கான மற்றொரு வழியாகும். இது விண்டோசிலும் மேக் ஓஎஸ் எக்சிலும் இயங்குகிறது. (.gvi) , (.gvp) ஆகிய அமைப்புகள் கொண்ட நிகழ்படங்களைப் பார்க்கும் வசதி கொண்டது. பயனர்கள் தங்கள் கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் போது கோப்பானது, (.gvi) கோப்பை விட சிறிய (.gvp) கோப்பாக இருக்கும்.
கூகுள் நிகழ்பட இயக்கியின் சேவையானது, ஆகத்து 17,2007இல் நிறுத்தப்பட்டது. ஜிவிஐ வடிவத்தில் வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான விருப்பமும் அகற்றப்பட்டது. எம்பி 4 வடிவத்தில் மட்டுமே கிடைக்கும் வசதி இருந்தது.
கூகுளின் உலாவியில் உள்ள நிகழ்பட இயக்கக் குறியீட்டின் ஆரம்பப் பதிப்புகள் திறந்த மூல வி. எல். சி மீடியா பிளேயரை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கூகுள் நிகழ்பட இயக்கியின் கடைசிப் பதிப்பு வி. எல். சியினை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இதில் OpenSSL குறியாக்க மற்றும் Qt விட்ஜெட் கருவித்தொகுதிகளை உள்ளாடக்கியுள்ளது.[6]
கூகுள், யூடியூப்பை கையகப்படுத்தியதால் கூகுள் நிகழ்படங்கள் மற்றும் கூகுள் நிகழ்பட இயக்கி ஆகியவை படிப்படியாக நிறுத்தப்பட்டன.
பன்னாட்டு அளவில்
தொகுகூகுள் நிகழ்படம் பின்வரும் பல்வேறு நாடுகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது:
நாடு/பிராந்தியம் | URL | மொழிகள் |
---|---|---|
ஆத்திரேலியா | http://video.google.com.au/ | ஆஸ்திரேலிய ஆங்கிலம் |
கனடா | http://video.google.ca/ | கனடிய ஆங்கிலம்கனடிய பிரெஞ்சு |
சீனா | http://video.google.cn/ | சைனீஸ் |
பிரான்சு | http://video.google.fr/ | பிரெஞ்சு |
செருமனி | http://video.google.de/ | ஜெர்மன் |
இத்தாலி | http://video.google.it/ | இத்தாலியன் |
நெதர்லாந்து | http://video.google.nl/ | டச் |
போலந்து | http://video.google.pl/ | போலிஷ் |
ஸ்பெயின் | http://video.google.es/ | ஸ்பானிஷ் |
ஐக்கிய இராச்சியம் | http://video.google.co.uk/ | பிரித்தானிய ஆங்கிலம் |
ஐக்கிய அமெரிக்கா | http://video.google.com | அமெரிக்க ஆங்கிலம் |
அர்கெந்தீனா | http://video.google.com.ar | ஸ்பானிஷ் |
முடக்கம்
தொகுஅக்டோபர் 9, 2006இல், கூகுள் தனது போட்டியாளரான யூடியூப்பை வாங்கியது. சூன் 13, 2007இல் கூகுள் வீடியோ தேடல் முடிவுகளானது யூடியூப் உள்ளிட்ட தங்களது மற்ற சேவைகளின் தகவல்களையும் காட்டும் என அறிவித்தது.[7]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Google Video Search Live". blogoscoped.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 6, 2017.
- ↑ "We're tuning in to TV". googleblog.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 30, 2023.
- ↑ "Google wants your video". googleblog.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் June 30, 2023.
- ↑ "Turning Down Uploads at Google Video". பார்க்கப்பட்ட நாள் August 6, 2017.
- ↑ Perez, Sarah (July 3, 2012). "Google Shutdowns Continue: iGoogle, Google Video, Google Mini & Others Are Killed | TechCrunch". பார்க்கப்பட்ட நாள் August 6, 2017.
- ↑ Copyrights for Google Video Player, noting the inclusion of several open source libraries
- ↑ Alex Chitu (June 13, 2007). "Google Frames a Video Search Engine".