கட்டுவள்ளம்

(கெட்டு வள்ளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கட்டுவள்ளம் அல்லது கெட்டுவள்ளம் (Kettuvallam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் காணப்படும் ஒருவகையான படகு வீடு ஆகும். கட்டு வள்ளம் என்பது கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட படகு எனப்பொருள் தரும். இப்படகு வீடுகள் 60 முதல் 70 அடி நீளமும் படகின் நடுப்பகுதியில் 15 அடி அகலமும் கொண்டிருக்கின்றன. இப்படகுகள் பொதுவாக அஞ்சிலி மரத்தைக் கொண்டு செய்யப்பட்டு இருக்கும். பொதுவாக இப்படகுகளின் கூரை பனை ஓலை மற்றும் மூங்கில்கள் கொண்டு வேயப்பட்டு இருக்கும்[1]. படகின் வெளிப்புறம் பாதிக்கப்படாமல் இருக்க அதன் வெளிப்பகுதி முந்திரிக்கொட்டையின் எண்ணெய் கொண்டு பூசப்படுகிறது.

வேம்பநாட்டு ஏரியிலிருந்து ஒரு படகு வீட்டின் தோற்றம்

வரலாறு தொகு

சாலைகளும் இருப்புப்பாதைகளும் இல்லாத காலங்களில் வணிகர்களின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கு இவை பெரிதும் பயன்பட்டன. பெரும்பாலும் குட்டநாட்டுக்கும் கொச்சி துறைமுகத்துக்கும் இடையே பொருட்களைக் கொண்டு செல்ல இவை பயன்படுத்தப்பட்டன.

இப்படகுகள் படகோட்டிகள் தூங்குவதற்கும் சமைப்பதற்கும் போதுமான வசதிகளைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் படகோட்டிகளின் குடும்பமும் படகில் உடன் இருந்தது. இப்படகோட்டிகள் படகு வலிக்கும் போது பாடும் பாடல்களும் அவர்களுடைய சமையல் முறைகளும் மிகவும் புகழ்பெற்றவை.

சுற்றுலா தொகு

தற்காலத்தில் இந்தப் படகுகள் சுற்றுலாவுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆழப்புழைப் பகுதியில் இந்தப் படகுகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஓரறை, இரண்டறை, மூன்று அறை கொண்ட வள்ளங்கள் மக்கள் தங்கிக் களிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. சுமார் 900 படகுகள் சுற்றுலாவிற்காக ஓடுவதாகக் கூறப்படுகிறது.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ayub, Akber (ed), Kerala: Maps & More, Backwaters, 2006 edition 2007 reprint, p. 47, Stark World Publishing, Bangalore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-902505-2-3

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுவள்ளம்&oldid=3506471" இலிருந்து மீள்விக்கப்பட்டது