கென்யாவில் யானை வேட்டை

கென்யாவில் யானை வேட்டை (Elephant hunting in Kenya) என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாக இருந்தது. இச்செயல் 1973 இல் தடைசெய்யப்பட்டது. அதே போல் தந்தம் வர்த்தகமும் தடைசெய்யப்பட்டது. இந்த கறுப்புச் சந்தையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியாக தந்தங்களை அழிப்பதில் கென்யா முன்னோடியாக இருந்தது.

கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவில் ஒரு ஆப்பிரிக்க யானை

வரலாறு தொகு

காலனித்துவ கென்யா தொகு

காலனித்துவ காலத்தில், கென்யாவில் யானைகளை வேட்டையாடுவது பிரபுக்களின் விளையாட்டாக பார்க்கப்பட்டது. மேலும் இதுகாலனித்துவ ஆளுநர்களால் சுரண்டப்பட்டது.[1] பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்கா மட்டும் இதில் தனித்துவமானது அல்ல: பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளில் பெரிய விளையாட்டு வேட்டை பிரபலமாக இருந்தது.

வெள்ளை வேட்டைக்காரர்களில், ஆண் யானை மிகவும் உற்சாகமான இலக்கு என்று கூறப்படுகிறது. சிறிய-துளை துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவது விருப்பமானதாக இருந்தது. மேலும் இதயத்திற்கு பதிலாக மூளையை குறிவைப்பது மற்றொரு விருப்பம். பணம் மட்டுமே இதற்கான நோக்கமாக எபோதும் இருந்ததில்லை. இருப்பினும், பல வேட்டைக்காரர்கள் யானைகளைக் கொல்வதில் கண்மூடித்தனமாக இருந்தனர். இளம், வயதான, ஆணோ அல்லது பெண்ணோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல, ஏனெனில் முதன்மை நோக்கம் தந்தம் விற்பதும் யானை இறைச்சியை அவர்களின் வேட்டைக் கூட்டத்திற்கு உணவளிப்பதும் பிரதானமாகக் கொண்டிருந்தனர். [2]

கிழக்கு ஆப்ப்பிரிக்க நிபுணத்துவ வேட்டைக்காரர்கள் சங்கம் தொழில்துறையை ஒழுங்குபடுத்தவும் அதிகப்படியான வேட்டையைக் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. நைரோபியில் உள்ள நோர்போக் விடுதியில் தொடங்கப்பட்ட இந்த சங்கம், வாகனம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் வேட்டையாடுவதை ஒழுங்குபடுத்தும் விருப்பத்திலிருந்து உருவானது. இது தொலைதூர வேட்டையாடும் பகுதிகளை அணுகுவதை மிகவும் எளிதாக்கியது. அதன் இருப்பு காலத்தில், கிழக்கு ஆப்பிரிக்க வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், உலகின் மிகவும் மதிக்கப்படும் சமூகங்களில் ஒன்றாகவும் அது நிறைய சாதிக்க முடிந்தது.[3]

இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த சாகசக்காரர் டபிள்யூ. டி. எம். பெல், பல ஆப்பிரிக்க நாடுகளில் பரவியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றதாகக் கூறப்படும் வெள்ளை வேட்டைக்காரர்களில் மிகவும் அறியப்பட்டவர்.[4] தி வாண்டரிங்ஸ் ஆஃப் ஆன் எலிஃபண்ட் ஹன்டர் (1923) என்ற தனது முதல் நினைவுக் குறிப்புகளில் இதனைப் பதிவு செய்துள்ளார்

1963 இல், சுதந்திரத்தின் முதல் ஆண்டில், கென்ய அரசாங்கம் யானைகளை வேட்டையாட 393 அனுமதிகளை ( வேட்டை உரிமங்கள் ) வழங்கியது.[5]

தடை, மற்றும் தந்தம் கடத்தல் தொகு

கென்யாவில் 1973 இல் யானை வேட்டை சட்டவிரோதமானதாக்கப்பட்டது. மேலும், 1977 இல் அனுமதியின்றி பிற அனைத்து விலங்குகளையும் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டது.[6]

1970களின் பிற்பகுதியில், யானைகளின் எண்ணிக்கை சுமார் 275,000 என மதிப்பிடப்பட்டது. 1989 இல் 20,000 ஆகக் குறைந்தது. [7] 1970 மற்றும் 1977 க்கு இடையில், கென்யா அதன் யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றை இழந்தது.[8]

1970 களில், அப்போதைய அரசுத் தலைவர் ஜோமோ கென்யாட்டாவின் மனைவி என்கினா கென்யாட்டா (மாமா எங்கினா) மற்றும் பிற உயர்மட்ட அரசு அதிகாரிகள், அரசு தனிப்பட்ட விமானத்தில் தந்தங்களை நாட்டிற்கு வெளியே கொண்டு சென்று தந்தம் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.[9][10] [11] [12] [13] "கென்யாவின் அரச குடும்பத்தில்" (கென்யாட்டா) குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராவது ஆறு டன் தந்தங்களை சீனாவிற்கு அனுப்பியதற்கான ஆவண ஆதாரம் இப்போது இருப்பதாக நியூ சயின்டிஸ்ட் கூறியது.[9]

1970 களில், கென்யாவில் 1900 யானைகள் தங்கள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டன. இது 1980 களில் 8300 யானைகளாக அதிகரித்தன. [14]

தந்தம் வர்த்தகத்திற்கு உலகலாவிய தடை தொகு

1989 ஆம் ஆண்டில், தந்த வர்த்தகத்தை நிறுத்துமாறு உலகை வற்புறுத்துவதற்கு ஒரு வியத்தகு சைகையாக, அதிபர் டேனியல் அராப் மொய் பன்னிரண்டு டன் யானை தந்தங்களை எரித்தார்.[15]

1990-களில், வணிக தந்தம் வர்த்தகம் மீதான பரவலான தடை சட்டவிரோத தொழிலின் ஒரு பகுதிக்கு குறைத்தது. மேலும், யானைகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் கறுப்பு சந்தையில் விற்பனை செய்வது இன்றும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. கென்யாவில் யானைத் தந்தம் வர்த்தகம் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு, மார்ச் 2002 இல் நடந்த மிகப்பெரிய வேட்டையாடும் சம்பவம், பத்து யானைகளைக் கொண்ட குடும்பம் கொல்லப்பட்டது.[7] இதற்கு அரசாங்கத்தில் நடக்கும் ஊழலே காரணமாகும்.

வனச் சுற்றுலா உட்பட தற்போதைய நிலைமை தொகு

 
தைடா-தவேட்டா மாவட்டத்தின் வொய் அருகே வேட்டைக்காரர்களால் தந்தம் அகற்றப்பட்ட யானையின் மண்டை ஓடு

கென்யாவில் யானைகளை வேட்டையாடுவது 40 ஆண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தாலும், பல கென்யா மக்களின் வறுமை மற்றும் யானை தந்தங்களின் அதிக மதிப்பு காரணமாக வேட்டையாடுதல் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. தந்தங்கள் பாரம்பரியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டன.[16]

தற்போதும் நைரோபியின் சர்வதேச விமான நிலையத்தில் கைதுகள் தொடர்கின்றன. 2010 இல் அங்கு 92 கிலோ மூல தந்தங்களும், 2011 இல் 96 கிலோ தந்தங்களும் கைப்பற்றப்பட்டன.[17]

கென்யாவின் மிகப்பெரிய ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றானதும்,[18][19][20][21][22][23][24] அதன் தந்தங்கள் கிட்டத்தட்ட தரையைத் தொடும் அளவுக்கு நீளமாகவும் இருந்த சடாவோ என்ற யானை 30 மே 2014 அன்று நஞ்சு கலந்த அம்பைப் பயன்படுத்தி வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதாக சாவோ அறக்கட்டளை அறிவித்தது. கென்யா வனவிலங்கு செவையாலும், சாவோ அறக்கட்டளையாலும் வேட்டையாடுபவர்களை தடுக்க முடியவில்லை.[25][26][27][28][29][30][31]

மேற்கோள்கள் தொகு

  1. American Museum of Natural History (1915). The American Museum journal. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  2. Steinhart (2006). Black poachers, white hunters: a social history of hunting in colonial Kenya. James Currey. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  3. Herne, Brian (1999). White Hunters: The Golden Age of African Safaris. New York: Henry Holt and Company, LLC. p. 167.
  4. Barclay, Edgar N. "Chapter One - correspondence with WDM Bell and author". Big Game Shooting Records 1931. HF&G Witherby.
  5. McNickle, Dan (19 March 2004). Teaching and Hunting in East Africa. Trafford Publishing. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4120-1935-4. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  6. "Africa's elephant explosion". Sportsafield. Archived from the original on 10 May 2016. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.
  7. 7.0 7.1 "Elephants on the High Street" (PDF). International Fund for Animal Welfare. March 2004. p. 18. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
  8. Douglas-Hamilton, I. (August 1979). "AFRICAN ELEPHANT IVORY TRADE STUDY FINAL REPORT". savetheelephants.org. p. 19. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
  9. 9.0 9.1 New Scientist. Reed Business Information. 22 May 1975. p. 452. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. At the hand of man: peril and hope for Africa's wildlife. Knopf. p. 51. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
  11. Animal kingdom. New York Zoological Society. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
  12. A view from a tall hill: Robert Ruark in Africa. Down East Enterprise Inc. 25 March 2004. p. 411. பார்க்கப்பட்ட நாள் 6 May 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Touched by Africa. Castle Press. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
  14. Lowery, N. (December 1997). "ICE Case Studies - CASE NUMBER: 33 - CASE MNEMONIC: POACH - CASE NAME: Ivory Poaching". American University. Archived from the original on 5 May 2016. பார்க்கப்பட்ட நாள் 9 May 2011.
  15. Perlez, Jane (July 19, 1989). "KENYA, IN GESTURE, BURNS IVORY TUSKS". The New York Times. https://www.nytimes.com/1989/07/19/world/kenya-in-gesture-burns-ivory-tusks.html. 
  16. Anderson, David. Conservation in Africa: Peoples, Policies and Practice. Cambridge University Press. p. 45.
  17. "Kenya Seizes Traveler Carrying Elephant Ivory". Voice of America News. April 29, 2010. http://blogs.voanews.com/breaking-news/2011/04/29/kenya-seizes-traveler-carrying-elephant-ivory/. 
  18. Peralta, Eyder (14 June 2014). "One of Kenya's Legendary 'Tuskers' Is Killed By Poachers". NPR இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616035336/http://www.npr.org/blogs/thetwo-way/2014/06/14/321972100/one-of-kenyas-legendary-tuskers-is-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  19. Kahumbu, Paula (2014). "Kenya's biggest elephant killed by poachers". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616094947/http://www.theguardian.com/environment/africa-wild/2014/jun/13/kenyas-biggest-elephant-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  20. Flood, Zoe (14 June 2014). "Poachers kill one of the world's largest elephants in Kenya". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615221723/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/kenya/10899944/Poachers-kill-one-of-the-worlds-largest-elephants-in-Kenya.html. பார்த்த நாள்: 15 June 2014. 
  21. Saul, Heather (14 June 2014). "Satao, Kenya's 'iconic' elephant, is killed by poachers". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615191611/http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/Satao-Kenyas-iconic-elephant-is-killed-by-poachers/articleshow/36552722.cms. பார்த்த நாள்: 15 June 2014. 
  22. Bryant, Christian (14 June 2014). "Popular elephant named Satao killed in Kenyan park". The Atlanta Journal-Constitution இம் மூலத்தில் இருந்து 17 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140617003020/http://www.ajc.com/news/news/world/popular-elephant-named-satao-killed-kenyan-park/ngLZs/. பார்த்த நாள்: 15 June 2014. 
  23. Staff (15 June 2014). "Kenya's iconic elephant Satao is dead in Tsavo". Kenya Television Network இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615031808/http://standardmedia.co.ke/ktn/index.php?videoID=2000079848&video_title=kenya-s-iconic-elephant-satao-is-dead-in-tsavo. பார்த்த நாள்: 15 June 2014. 
  24. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AFP என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  25. Peralta, Eyder (14 June 2014). "One of Kenya's Legendary 'Tuskers' Is Killed By Poachers". NPR இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616035336/http://www.npr.org/blogs/thetwo-way/2014/06/14/321972100/one-of-kenyas-legendary-tuskers-is-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  26. Kahumbu, Paula (2014). "Kenya's biggest elephant killed by poachers". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 16 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140616094947/http://www.theguardian.com/environment/africa-wild/2014/jun/13/kenyas-biggest-elephant-killed-by-poachers. பார்த்த நாள்: 15 June 2014. 
  27. Flood, Zoe (14 June 2014). "Poachers kill one of the world's largest elephants in Kenya". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615221723/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/kenya/10899944/Poachers-kill-one-of-the-worlds-largest-elephants-in-Kenya.html. பார்த்த நாள்: 15 June 2014. 
  28. Saul, Heather (14 June 2014). "Satao, Kenya's 'iconic' elephant, is killed by poachers". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615191611/http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/Satao-Kenyas-iconic-elephant-is-killed-by-poachers/articleshow/36552722.cms. பார்த்த நாள்: 15 June 2014. 
  29. Bryant, Christian (14 June 2014). "Popular elephant named Satao killed in Kenyan park". The Atlanta Journal-Constitution இம் மூலத்தில் இருந்து 17 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140617003020/http://www.ajc.com/news/news/world/popular-elephant-named-satao-killed-kenyan-park/ngLZs/. பார்த்த நாள்: 15 June 2014. 
  30. Staff (15 June 2014). "Kenya's iconic elephant Satao is dead in Tsavo". Kenya Television Network இம் மூலத்தில் இருந்து 15 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140615031808/http://standardmedia.co.ke/ktn/index.php?videoID=2000079848&video_title=kenya-s-iconic-elephant-satao-is-dead-in-tsavo. பார்த்த நாள்: 15 June 2014. 
  31. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AFP2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்யாவில்_யானை_வேட்டை&oldid=3945598" இலிருந்து மீள்விக்கப்பட்டது