கெப்லர்-16பி

கெப்லர்-16பி
Kepler-16b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

கலைஞரின் கைவண்ணத்தில் கெப்லர்-16 தொகுதி,
கெப்லர்-16பி சுற்றி வருவது காட்டப்பட்டுள்ளது.
தாய் விண்மீன்
விண்மீன் கெப்லர்-16
விண்மீன் தொகுதி சிக்னசு
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 11.5
தொலைவு200[1] ஒஆ
(61 புடைநொடி)
சுற்றுவட்ட இயல்புகள்
Epoch BJD 2455212.12316
அரைப் பேரச்சு(a) 0.7048 ± 0.0011 AU
மையப்பிறழ்ச்சி (e) 0.0069 ± 0.0015
சுற்றுக்காலம்(P)228.776 ± 0.037 நா
சாய்வு (i) 90.0322 ± 0.0023°
Longitude of the node (Ω) 0.003 ± 0.013°
Argument of
periastron
(ω) 318 ± 22°
இருப்புசார்ந்த இயல்புகள்
திணிவு(m)0.333 ± 0.015 MJ
ஆரை(r)0.22623 ± 0.00059 RJ
மேற்பரப்பு ஈர்ப்பு(g)14.52 ± 0.7 மீ/செ²
வெப்பநிலை (T) 170 - 200 கெ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் 07.07.2011
கண்டுபிடிப்பாளர்(கள்) லாரன்சு டொயில்[1]
கண்டுபிடித்த முறை கடப்பு முறை, (கெப்லர் திட்டம்)
கண்டுபிடிப்பு நிலை Published
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

கெப்லர்-16பி (Kepler-16b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். சனியைப் போன்ற கோளான இது பாதி வளிமத்தையும், பாதி திடப் பொருளையும் கொண்டது[2]. கெப்லர்-16 என்ற இருமச் சூரியன்களை 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது[3]. இரட்டைச் சூரியன்களைச் சுற்றிவரும் கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்[4].

கெப்லர்-16பி என்ற இப்புறக்கோள் நாசாவின் கெப்லர் விண்கலத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[5]. சூரியக் குடும்பத்தின் விண்மீன்களில் ஒன்று மின்னி, மற்றொன்று அதன் ஒளியை மறைக்கின்றன என்பதை கடப்பு முறையில் காண்கையில் விஞ்ஞானிகள் அங்கிருக்கும் கோளை கண்டறிய முடிகிறது. கெப்லர்-16 அமைப்பில் உள்ள பொருட்களின் வடிவம் மற்றும் நிறைகளின் கணக்குகளை உயர் துல்லியமாய் அளவிட இந்தக் கோள் செய்யும் கடப்புகள் வித்திடுகின்றன. மவுண்ட் வியூ, காலிபோர்னியாவில் உள்ள எஸ்இடிஐ நிறுவனத்தின் கோள் கண்டறி குழுவின் தலைவர் லாரன்ஸ் தோயில் இதன் துல்லியத்தைப் பற்றி, "சூரியக் குடும்பத்திலேயே மிகச்சிறப்பாக அளவிடப்பட்ட கோள் இதுவே என்று நம்புகிறேன்" என்றார்.

கெப்லர்-16பி, இரட்டை விண்மீன் மண்டலத்தின் உள் சுற்றுப்பாதை ஆரம் என்று கருதப்பட்ட எல்லையயும் தாண்டி விழுவதும் இதில் வழக்கமற்றதாகவுள்ளது. மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கோள்மேதை சாரா சீசர் கூறுகையில், இந்த கோள் இருக்கும் அமைப்பை பார்க்கும் பொழுது இதன் நிலையான சுற்றுப்பாதையானது, இரட்டை விண்மீன்களும் எவ்வளவு தொலைவில் உள்ளதோ அதைவிட ஏழுமடங்கு அதிக தொலைவில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால் கெப்லர்-16பி அதில் வெறும் பாதித் தொலைவில் தான் உள்ளது என்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Laurance R. Doyle, Joshua A. Carter, Daniel C. Fabrycky; et al. (2011). "Kepler-16: A Transiting Circumbinary Planet". arXiv:1109.3432 [astro-ph.EP]. {{cite arXiv}}: Explicit use of et al. in: |last= (help); Unknown parameter |version= ignored (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. Drake, Nadia. "On Kepler-16b, shadows come in pairs". Science News. Society for Science & the Public. Archived from the original on 26 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011.
  3. Doyle, Laurance (2011-09-15). "First Planet Orbiting Two Stars Discovered by the NASA Kepler Spacecraft". The Huffington Post. http://www.huffingtonpost.com/seti-institute/first-planet-orbiting-two_b_964604.html. பார்த்த நாள்: 16 September 2011. 
  4. Baldwin, Emily. "Kepler planet circles two suns". Astronomy Now Online. Pole Star Publications Ltd. Archived from the original on 19 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 September 2011.
  5. Gold, Scott (2011-09-15). "Scientists find planet orbiting two suns like in 'Star Wars'". Los Angeles Times. http://www.latimes.com/news/local/la-me-double-sun-20110916,0,7303143.story. பார்த்த நாள்: 16 September 2011. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-16பி&oldid=3616424" இலிருந்து மீள்விக்கப்பட்டது