கெரஜ்
பைசா அல்லது பைசி அல்லது கெரஜ் (மொங்கோலியம்: Пайз, பாரசீக மொழி: پایزه pāiza, páizi) என்பது மங்கோலிய அதிகாரிகளாலும் தூதர்களாலும் சில சலுகைகள் மற்றும் அதிகாரங்களைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு தாயத்து ஆகும். இது மங்கோலிய உயர்குடியினரும், அதிகாரிகளும் பொது மக்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளைக் கோருவதற்கு உதவியது.
பைசா கொண்ட ஒருவருக்கு மட்டுமே பொருட்களும், சவாரிக் குதிரைகளும் யாம் வழித்தடங்களில் வழங்கப்பட வேண்டும். எனினும், அரிதான இராணுவ பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் யாம் வழித்தடங்களை பைசா இன்றியும் பயன்படுத்தினர். மங்கோலியப் பேரரசின் அதிகாரிகள் மற்றும் பிரபுக்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பைசாக்களை வெளியிட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். எனவே, ஒக்தாயி கான் (ஆட்சி 1229-1241) பிரபுக்கள் பைசாக்கள் மற்றும் ஜர்லிக்குகள் வழங்குவதைத் தடை செய்தார்.
வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் திறமைசாலிகளை ஈர்ப்பதற்காக, பெரிய கான்கள் அவர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதோடு அவர்கள் யாம் நிலையங்களைப் பயன்படுத்துவதற்கும் அனுமதி அளித்தனர்.[1] இருப்பினும், மோங்கே கான் (ஆட்சி 1251-1259) இதைத் தவறான வழியில் பயன்படுத்துவதைத் தடுக்க வணிகர்களின் வியாபாரத்தை மேற்பார்வையிடுவதற்கு ஏகாதிபத்திய விசாரணையாளர்களை அனுப்பினார். அவர் யாம் (சாம்) மற்றும் பைசா ஆகியவற்றைப் பயன்படுத்த அவர்களுக்குத் தடை விதித்தார்.
-
மங்கோலிய எழுத்துமுறையில் எழுதப்பட்ட ஒரு பைசா. கோல்டன் ஹோர்டேயின் முன்னாள் பிராந்தியமான தினேப்பர் ஆற்றுப் பகுதியில் 1845ல் கண்டெடுக்கப்பட்டது.
-
மங்கோலியாவின் பக்ஸ்-பா எழுத்துக்களில் எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ கடவு. “நித்திய சொர்க்கத்தின் வல்லமையால், [இது] பேரரசரின் கட்டளையாகும். எவரேனும் [இதைத் தாங்கிக் கொண்டிருப்பவருக்கு] மரியாதை காட்டாவில்லையெனில் குற்றம் செய்தவராவார்" என்று கூறுகிறது.
-
மங்கோலியப் பேரரசின் ஒரு இரவுநேரக் காவலாளியின் கடவு. எழுத்துக்கள்: பாரசீகம் (இடது), பக்ஸ்-பா எழுத்துமுறை (மையம்) மற்றும் உய்குர் (வலது). "அறிவிப்பு: தீயவர்களைச் சற்று கவனியுங்கள்" என்று கூறுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ Ata Malik Juvaini, trans. and ed. John Andrew Boyle, David Morgan-Genghis Khan: the history of the world conqueror, p.29