கெரயிடுகள்

கெரயிடுகள் (மொங்கோலியம்: Хэрэйд) என்பவர்கள் கி.பி. 12ம் நூற்றாண்டில் அல்தை சவன் பகுதியிலிருந்த ஐந்து முக்கியமான துருக்கிய[1] அல்லது துருக்கிய-மங்கோலிய பழங்குடியின[2][3] கூட்டமைப்பினரில் (கானேடு) ஒருவர் ஆவர். இவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசுதோரியக் கிறித்தவ மதத்திற்கு மாறினர். ஐரோப்பாவின் பிரஸ்தர் ஜான் என்ற புராணக் கதாபாத்திரம் இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கெரயிடுகள்
Хэрэйд (கெரேயிட்)
குடிமக்களாக:
லியாவோ அரசமரபு, காரா கிதை, செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் கீழ்
KhitanAD1000.png
 
KaraKhanidAD1000.png
11ம் நூற்றாண்டு–13 ம் நூற்றாண்டு [[மங்கோலியப் பேரரசு|]]
தலைநகரம் குறிக்கப்படவில்லை
சமயம் நெசுத்தோரியக் கிறித்தவம்
அரசாங்கம் கானேடு
கான்
 -  11ம் நூற்றாண்டு மர்குஸ் புய்ருக் கான்
 -  12ம் நூற்றாண்டு சரைக் கான்
 -  12ம் நூற்றாண்டு குர்சகுஸ் புய்ருக் கான்
 -  –1203 தொகுருல் கான் (கடைசி)
வரலாற்றுக் காலம் நடுக் காலம்
 -  உருவாக்கம் 11ம் நூற்றாண்டு
 -  கிறித்தவ மதத்திற்கு மாற்றம்
 -  மங்கோலியப் பேரரசுக்குள்
உட்கொள்ளப்பட்டனர்.
13 ம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள் உறுதிப்படுத்தப்படாதது: அர்கின், கிரே

இவர்கள் ஆண்ட பகுதியானது விரிவானது ஆகும். அது தற்கால மங்கோலியா முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. வசிலி பர்தோல்த் (1913) என்ற வரலாற்றாசிரியர் இவர்கள் ஆனன் மற்றும் கெர்லென் ஆறுகளின் மேல் பகுதியில் தூல் ஆற்றின் அருகிலே இருந்ததாகக் கூறுகிறார்.[4] இவர்கள் 1203ல் செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டனர். மங்கோலியப் பேரரசின் வளர்ச்சியிலே செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். 13ம் நூற்றண்டில் துருக்கிய-மங்கோலிய கானேடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

ReferencesEdit

  1. Michal Biran (2012). Chinggis Khan. https://books.google.com/books?id=ndPZAQAAQBAJ&pg=PT153&dq=ong+khan+turkic&hl=sv&sa=X&ved=0ahUKEwiZyOGC9cvPAhXB2SwKHRL4ChMQ6AEIKzAC#v=onepage&q=ong%20khan%20turkic&f=false. 
  2. Daniel H. Bays (2011). A New History of Christianity in China. John Wiley & Sons.. 
  3. Carter Vaughn Findley (2004). The Turks in World History. பக். 87. 
  4. V.V. Bartold in the article on Genghis Khan in the 1st edition of the Encyclopedia of Islam (1913); see Dunlop (1944:277)