கெர்ட் ஹான்பர்க்

கெர்ட் ஹான்பர்க் (30 மே 1969, பிரெட்ஸ்ட்ரூப்) டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு முன்னாள் பன்னாட்டு வேகவழி விசையுந்து ஓட்டுனர் ஆவார்.[1] டேனிய இளையோர் வாகையர் பட்டத்தை வென்ற பிறகு 1988 ஆம் ஆண்டில் கிராட்லி வேகவழி அணியினரிடம் சேர்ந்தார். அவர் 1989 ஆம் ஆண்டில் 21-வயதுக்குக் கீழுள்ளோருக்கான உலக வாகையர் பட்டத்தை வென்றார். 1991-ம் ஆண்டு குழுவினர் உலகக் கோப்பையைை வென்ற டென்மார்க் வேகவழி அணியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் 1992-ம் ஆண்டில் தனியோருக்கான உலக இறுதிப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் இங்கிலாந்தில் கிராட்லி ஹீதன்ஸ் அணிக்கும் சுவீடனில் டக்கர்னா அணிக்கும் விசையுந்து ஓட்டியுள்ளார்.

உலக இறுதிப்போட்டியில் தொகு

தனிநபர் உலக வாகையர் பட்டம் தொகு

குழுவினர் உலகக் கோப்பை தொகு

  • 1989 -   பிராட்போர்டு, ஓட்சல் விளையாட்டரங்கம் - (ஹான்ஸ நீல்சன் / எரிக் குண்தர்சன் / யான் யோகன்சன் / பிரையன் கார்கர் ஆகியோருடன் இணைந்து) - இரண்டாவது - 34 புள்ளிகள் (9)

குறிப்புகள் தொகு

  1. Oakes, P (1991). 1991 Speedway Yearbook. ISBN 0-948882-20-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்ட்_ஹான்பர்க்&oldid=3863516" இலிருந்து மீள்விக்கப்பட்டது