கெல்ட்டியர்

இனமொழி குழு
(கெல்டிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கெல்ட்டியர் (Kelts) அல்லது செல்ட்டியர் (Celts) எனப்படுவோர் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர்.. இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.

காலத்தால் கெலிட்டிய மக்களின் பரவல்:
  கி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய ஆல்சுட்டாட் (Hallstatt) வாழ்பகுதி
  அதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்
  ஐபீரியாவின் லூசித்தானியா பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை
  தற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு கெல்ட்டிய நாடுகள்
  இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்

கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.

ஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் "கெல்டிக்" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். ("கெல்டிக்" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே "கெல்டிக்ஸ்" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் "கெல்டிக்" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை "பிரிட்டன் கெல்டிக்" என்று அழைத்தனர்.

முதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட் பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது.

சொல்விளக்கம்

தொகு

"கெல்டிக்" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலகட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். "கெல்டிக்" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் "பாபேரியன்" எனப்படுகிறது. "பாபேரியன்" என்றால் தமிழில் "காட்டுமிராண்டி" என்பதாகும்.

அதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ட்டியர்&oldid=3651277" இலிருந்து மீள்விக்கப்பட்டது