ஆஸ்திரியா

மத்திய ஐரோப்பிய நாடு
(ஆசுத்திரியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆத்திரியா (Austria ஒலிப்பு/ˈɔːstriə/) அல்லது ஆத்திரியக் குடியரசு (Republic of Austria) என்பது ஐரோப்பாவில் உள்ள நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடு ஆகும். இங்கு 8.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[2] இதன் எல்லைகளாக வடக்கே செருமனி, செக் குடியரசு, கிழக்கே சிலோவாக்கியா, அங்கேரி, தெற்கே சுலோவீனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, இலீக்கின்சுடைன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். ஆல்ப்சு வானிலை உள்ள இந்நாடு 83,855 சதுர கிலோமீட்டர்கள் (32,377 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆல்புசு மலைத்தொடர்கள் பல உள்ள ஒரு அழகான நாடு ஆகும். நாட்டின் 32% நிலப்பகுதியே 500 மீட்டர்கள் (1,640 அடி) கீழாக உள்ளது; மிக உயரமான சிகரம் 3,798 மீட்டர்கள் (12,461 அடி) உள்ளது.[3] பெரும்பாலான மக்கள் இடாய்ச்சு மொழியின் உள்ளூர் பவேரிய வழக்குமொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[4] ஆத்திரிய இடாய்ச்சு மொழி நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது.[5] மற்ற உள்ளூர் அலுவல் மொழிகளாக அங்கேரிய, பர்கென்லாண்ட் குரோசிய, சுலோவேனிய மொழிகள் உள்ளன.[3]

ஆத்திரியக் குடியரசு
Republik Österreich
கொடி of ஆத்திரியாவின்
கொடி
சின்னம் of ஆத்திரியாவின்
சின்னம்
குறிக்கோள்: 
நாட்டுப்பண்: Land der Berge, Land am Strome  (செருமன்)
மலைகளின் நாடு, ஆறுகள் சூழப்பட்ட நாடு

அமைவிடம்: ஆஸ்திரியா  (dark green) – in ஆத்திரியா  (light green & dark grey) – in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (light green)  —  [Legend]
அமைவிடம்: ஆஸ்திரியா  (dark green)

– in ஆத்திரியா  (light green & dark grey)
– in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (light green)  —  [Legend]

தலைநகரம்வியன்னா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)செருமன்,
சிலோவேன் , குரேசியன் மற்றும் அங்கேரியன்
மக்கள்ஆத்திரியர்கள்
அரசாங்கம்கூட்டாட்சி பாராளுமன்றக் குடியரசு
அலெக்சாந்தர் வான் டெர் பெலென்
செபாசிடியன் குருடசு
தன்னாட்சி
• ஆத்திரிய அரச உடன்பாடு அமலில் உள்ளது.

சூலை 27, 1955
• நடுநிலைமை அறிவிப்பு
அக்டோபர் 26, 1955 (முன்பு: ஆத்திரியப் பேரரசு: 1804, முதல் ஆத்திரியக் குடியரசு: 1918)
பரப்பு
• மொத்தம்
83,883 km2 (32,387 sq mi) (115ஆவது)
• நீர் (%)
1.7
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
8,316,487 (93ஆவது)
• 2023 கணக்கெடுப்பு
9,104,772
• அடர்த்தி
109/km2 (282.3/sq mi) (78ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2008 மதிப்பீடு
• மொத்தம்
$317.007 பில்லியன்[1] (34ஆவது)
• தலைவிகிதம்
$39,647[1] (IMF) (8ஆவது)
மொ.உ.உ. (பெயரளவு)2008 மதிப்பீடு
• மொத்தம்
$371.219 பில்லியன்[1] (23ஆவது)
• தலைவிகிதம்
$44,851[1] (IMF) (12ஆவது)
ஜினி (2000)29.1
தாழ்
மமேசு (2005)Increase 0,951
Error: Invalid HDI value · 14ஆவது
நாணயம்யூரோ () ² (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி43
இணையக் குறி.at ³
  1. சிலோவேன், குரேசியன், அங்கேரியன் என்பன அதிகாரபூர்வமான பிராந்திய மொழிகளாகும்.
  2. 1999 முன்பு: ஆத்திரியன் சில்லிங்கு.
  3. .eu ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்

தொகு

இலங்கை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆத்திரியாவும் ஒன்று. ஆஸ்திரியாவின் பெரும்பகுதி புனித உரோமைப் பேரரசு ஆளுகையில் ஆப்சுபர்கு மன்னர்களின் கீழ் இருந்தது. கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் போது பேரரசரின் அதிகாரத்தை எதிர்த்து பல வடக்கத்திய செருமன் இளவரசர்கள் சீர்திருத்தத் திருச்சபையை ஆதரித்தனர். முப்பதாண்டுப் போர், சுவீடன், பிரான்சு, பிரசியாவின் எழுச்சி, நெப்போலியப் போர்கள் ஆகியனவற்றால் பேரரசின் அதிகாரம் வடக்கு செருமனியில் வெகுவாகக் குறைந்தது; ஆனால் தெற்கும் செருமனியல்லாத பகுதிகளும் பேரரசு மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இருந்தன. 17ஆம்,18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் உலக வல்லமைகளில் ஒன்றாக ஆஸ்திரியா இருந்தது.[6][7] பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரான்சு பேரரசராக முடி சூடியபோது அதற்கு எதிர்வினையாக ஆத்திதிரிய பேரரசு 1804இல் நிறுவப்பட்டது. நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு ஆத்திரியா செருமனியின் பெரும்பகுதியை கட்டுப்படுத்த பிரசியா முதன்மை போட்டியாளராக இருந்தது. 1866இல் ஆத்திரிய-பிரசியாப் போரில் தோற்றதால் பிரசியா செருமனியின் பெரும்பகுதியை கையகப்படுத்தியது. 1867இல் ஏற்பட்ட உடன்பாட்டின்படி ஆத்திரியா-அங்கேரி உருவானது. 1870இல் பிரசியாவுடனான போரில் பிரான்சு தோற்றபிறகு புதிய செருமானியப் பேரரசு உருவாக்கப்பட்ட போது ஆஸ்திதிரியா சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பிந்தைய ஆண்டுகளில் ஆத்திரியாவின் அரசியலும் வெளியுறவுக் கொள்கையும் பிரசியாவுடன் இணைந்திருந்தது. 1914ஆம் ஆண்டில் பிரான்சு பேர்தினண்டின் கொலையை அடுத்த சூலை சிக்கலின்போது செருமன் அரசு வழிகாட்டுதலில் செர்பியாவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது; இதுவே முதல் உலகப் போர் மூளக் காரணமாயிற்று.

முதல் உலகப் போரின்

தொகு

முதல் உலகப் போரின் முடிவில் 1918இல் ஆப்சுபர்கு பேரரசு குலைந்த பிறகு ஆத்திரியா வீமார் குடியரசின் செருமனியுடன் இணையும் எண்ணத்துடன் செருமன்-ஆத்திரியா குடியரசு (Deutschösterreich, பின்னர் Österreich) எனப் பெயர் சூட்டிக்கொண்டது. ஆனால் 1919இல் செயின்ட்-செருமைன்-ஆன்-லாயெ உடன்பாட்டின்படி இது தடை செய்யப்பட்டது. 1919இல் முதல் ஆத்திரிய குடியரசு நிறுவப்பட்டது. 1938இல் நாட்சி செருமனி ஆத்திரியாவைக் கைப்பற்றியது.[8] 1945இல் இரண்டாம் உலகப் போர் முடியும்வரை இந்நிலை நீடித்தது. செருமனியை கைப்பற்றிய நேசநாடுகள் ஆத்திரியாவின் முந்தைய குடியரசு அரசியலமைப்பை மீள்வித்தது. 1955இல் ஆத்திரியா இறையாண்மையுள்ள நாடாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில் ஆத்திரிய நாடாளுமன்றம் நடுநிலை சாற்றுரையை நிறைவேற்றியது; இதன்மூலம் இரண்டாம் ஆத்திரியக் குடியரசு நிரந்தரமாக நடுநிலை நாடாக உருவானது.

இன்று ஆத்திரியா ஒன்பது கூட்டாண்மை மாநிலங்களைக் கொண்ட நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி ஆகும்.[3][9] 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வியன்னா தலைநகராகவும் மிகப் பெரும் நகருமாகவும் உள்ளது.[3][10] $46,330 (2012 மதிப்பீடு) ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி கொண்ட ஆத்திரியா உலகின் செல்வமிக்க நாடுகளில் ஒன்றாகும். நாட்டின் வாழ்க்கைத்தரம் மிக உயர்ந்ததாக உள்ளது; 2011இல் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் உலகில் 19ஆவது இடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் 1955 முதல் உறுப்பினராக உள்ளது;[11] 1995இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது;[3] பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நிறுவன நாடாக உள்ளது.[12] ஆத்திரியா 1995இல் செஞ்சென் உடன்பாட்டிலும் கையொப்பிட்டுள்ளது.[13] 1999இல் ஐரோப்பிய நாணயமாற்றான ஐரோவை ஏற்றுக் கொண்டது.

வரலாறு

தொகு
 
ரோமானியர்களால் நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வரைபடம்

பண்டைய காலம்

தொகு

பண்டைய காலத்தில் நீண்ட காலத்துக்கு முன் பல மனிதக் குடியிருப்புக்கள் இருந்த இடமே தற்போது ஆஸ்திரியாவாக உள்ளது. முதல் குடியேறிகள் குடியேறியது பழைய கற்காலத்திலேயே ஆகும். அது நியண்டர்தால் மனிதனின் காலம் ஆகும். கற்காலத்தில் மக்கள் அங்கு செப்பு போன்ற கனிய வளங்களை தோண்டுவதற்காகவே வாழ்ந்து வந்தனர். பண்டைய ஆஸ்திரியாவில் ஏட்சி எனும் ஒருவகை பனிமனிதன் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் ஒடும் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டான். வெண்கலக் காலத்தில் மக்கள் பெரிய குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் கட்டினர், குறிப்பாக கனிய வளங்கள் எங்கு அதிகமாகக் காணப்பட்டதோ அவ்விடங்களுக்கு அருகில் குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஆஸ்திரியாவின் மேல்பகுதியில் உப்புச் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர்.

ரோமானிய நகரங்களும் அவற்றின் நவீன பெயர்களும்

தொகு

ரோமானியர்கள் ஆஸ்திரியாவுக்கு கி.மு. பதினைந்தாம் ஆண்டில் வந்தார்கள், இவர்களின் வருகையின் பின் ஆஸ்திரியா மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நவீன ஆஸ்திரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன,

  • ரேட்டியா (Raetia)
  • நொரிசும் (Noricum)
  • பனோனியா (Pannonia) என்பவையாகும்.

நவீன நேரங்களில்

தொகு

நவீன காலங்களில் ஆஸ்திரியா ஆஸ்திரிய பேரரசால் ஆளப்பட்டு வந்தது. இக்காலம் கிமு 800க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலமாகும். இது அக்காலங்களில் ஆஸ்திரியா பேரளவாக ஹப்ஸ்பர்க் அரச வம்சத்தினாலேயே ஆளப்பட்டு வந்தது.

சமயங்கள்

தொகு

இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுபத்து நான்கு வீதமான மக்கள் சனத்தொகை ரோமன் கத்தோலிக்கமாகவே காணப்பட்டது.

புவியியல்

தொகு

எல்லைகள்

தொகு

ஆஸ்திரியா ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. வடக்குத் திசையில் செக் குடியரசும், கிழக்குத் திசையில் சிலோவாக்கியா மற்றும் ஹங்கேரியும், தெற்குத் திசையில் சிலோவேனியா மற்றும் இத்தாலியும் மேற்கு வடமேற்குத் திசைகளில் முறையே சுவிஸ்ர்லாந்தும், செருமனியும் உள்ளன.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

ஆஸ்திரியா ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது பிரிவுகளும் மாவட்டங்களாகவும் சட்டரீதியான நகரங்களாகவும் (statutory cities) பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் நகராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் Bundesland தலைநகரம் Hauptstadt பரப்பளவு
(sq km)
சனத்தொகை
1 சனவரி 2023
புர்கென்லான்ட் Burgenland ஏய்சென்ச்டட்ர் Eisenstadt 3,965 301,250
கரின்தையா Carinthia க்லஜென்ஃபுர்ட் Klagenfurt am Wörthersee 9,537 568,984
கீழ் ஆஸ்திரியா Lower Austria சன்க்ட் பொல்ட்டென் Sankt Pölten 19,180 1,718,373
சல்பேர்க் Salzburg சல்பேர்க் Salzburg 7,155 568,346
சிடிரியா Styria க்ராஸ் Graz 16,399 1,265,198
டைரொல் Tyrol இன்ஸ்புரக் Innsbruck 12,648 771,304
மேல் ஆஸ்திரியா Upper Austria லின்ஸ் Linz 11,982 1,522,825
வியன்னா Vienna 415 1,982,097
வொரர்ல்பேர்க் Vorarlberg பிரெக்ன்ஸ் Bregenz 2,602 406,395

படத் தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Austria, economic data
  2. "Bevölkerungsstand und −veränderung". Statistik Austria. 19 May 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Austria". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 14 May 2009. Archived from the original on 10 June 2009. பார்க்கப்பட்ட நாள் 31 May 2009.
  4. "Die Bevölkerung nach Umgangssprache, Staatsangehörigkeit und Geburtsland" (PDF). Statistik Austria. Archived from the original (PDF) on 13 November 2010. பார்க்கப்பட்ட நாள் 17 November 2010.
  5. "Austria". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 31 May 2009. Archived from the original on 19 April 2009. பார்க்கப்பட்ட நாள் 31 May 2009.
  6. Market Liberalism: A Paradigm for the 21st Century, page 247, David Boaz, Edward H. Crane, கேட்டோ நிறுவனம், Washington D.C. 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-932790-98-9
  7. The Transformation of European Politics, 1763–1848, Oxford History of Modern Europe, page 209, Paul W. Schroeder, Oxford University Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-820654-5
  8. "Anschluss". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 24 September 2009. பார்க்கப்பட்ட நாள் 31 May 2009.
  9. Lonnie Johnson 17
  10. "Probezählung 2006 – Bevölkerungszahl" (PDF). Statistik Austria (in German). 31 October 2006. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  11. Jelavich 267
  12. "Austria About". OECD. Archived from the original on 6 May 2009. பார்க்கப்பட்ட நாள் 20 May 2009.
  13. "Austria joins Schengen". Migration News. May 1995. பார்க்கப்பட்ட நாள் 30 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரியா&oldid=4085223" இலிருந்து மீள்விக்கப்பட்டது