கேகன் பறக்கும் அணில்
கேகன் பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெட்டினோமிசு
|
இனம்: | பெ. கெகெனி
|
இருசொற் பெயரீடு | |
பெட்டினோமிசு கெகெனி ஜெண்டிக், 1888 |
கேகன் பறக்கும் அணில் (Hagen's flying squirrel)(பெட்டினோமிசு கெகெனி) என்பது இசுகுரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2]
வாழிடம்
தொகுஇது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தன் மற்றும் சுமத்ராவில் இது காணப்படுகிறது.[3]
விளக்கம்
தொகுமந்தமான சிவப்பு-பழுப்பு நிற ரோமங்களைக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மரம் விட்டு மரம் சறுக்கிச் செல்லும் உயிரி ஆகும். கேகன் பறக்கும் அணில் உடலின் மேல் பகுதி பழுப்புத் தோலுடன் காணப்படும். இதன் அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் உள்ளது. சிவப்பு-பழுப்பு நிறத்தின் ஒரு பரந்த பட்டை இதன் கண்களுக்கு இடையிலிருந்து காதுகள் வரை நீண்டு காணப்படும்.[3]
இதன் காதுகளுக்கு முன்னும் பின்னும் நீண்ட, கடினமான முடிகள் உள்ளன. இதன் வால் அடர்த்தியான மயிருடன், மேலே கறுப்பு-சிவப்பு நிறமாகவும், கீழே கறுப்பு-சிவப்பு நுனிகளைக் கொண்டதாகவும் இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerrie, R.; Kennerley, R.; Koprowski, J. (2017). "Petinomys hageni". IUCN Red List of Threatened Species 2017: e.T16736A22241918. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T16736A22241918.en. https://www.iucnredlist.org/species/16736/22241918. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
- ↑ 3.0 3.1 3.2 World, Hagen’s Flying Squirrel, Petinomys hageni, Gliding Mammals of the. "Hagen's Flying Squirrel / Petinomys hageni". www.myym.ru (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)