கேடயச் சுரப்பி புற்றுநோய்
கேடயச் சுரப்பி புற்றுநோய் (Thyroid cancer) என்பது கேடயச் சுரப்பியில் உள்ள இழையங்களில் வளரக்கூடிய ஒரு வகையான புற்று நோய் ஆகும்.[1] இந்த வகையான நோய்களில் உயிரணுக்கள் அதிக அளவில் வளர்ச்சிபெற்று மனித உடலின் மற்ற பாகங்களுக்கும் இந்த நோயினைப் பரப்பும் தன்மையைக் கொண்டுள்ளது.[2][3] கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி வருதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
மிக இளம் வயதில் கதிர்வீச்சு வெளிப்பாடு , முன்கழுத்துக் கழலை ஏற்படுதல், மற்றும் மரபு வழி ஆகியன பாதிக்கப்படுவதற்கான காரணிகளாகக் கருதப்படுகின்றன.[4][5] இது நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. சதைக் காம்பு கேடயப் புற்றுநோய், நுண்குமிழ் கேடயப் புற்றுநோய், முகுளப் புற்றுநோய் மற்றும் உத்துருவம் கேடயப் புற்றுநோய் ஆகியனவாகும்.[6] செவியுணரா ஒலி மற்றும் நல் ஊசி உறிஞ்சுதல் மூலம் இவ்வகையான நோய்களைக் கண்டறியலாம்.[4]
கதிரியக்க சிகிச்சை, வேதிச் சிகிச்சை போன்ற முறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.[7] அறுவை சிகிச்சைகளின் போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளையும் நீக்க வேண்டிய தேவை இருக்கலாம்.[8] அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 98 விழுக்காடு மக்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.[9]
2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 3.2 மில்லியன் மக்கள் கேடயச் சுரப்பி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டனர். 2012 இல் 2,98,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.[10] இதில் பெரும்பானமையான மக்கள் 35 மற்றும் 65 வயதில் இருந்தனர்.[11] இந்நோயினால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.[11] ஆசிய வழித்தோன்றல்களில் இருந்து வந்த மக்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டனர்.[12] கடந்த சில ஆண்டுகளில் நோயினைக் கண்டறியும் விதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.[10] 2015 இல் இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31,900 ஆக கண்டறியப்பட்டுள்ளது.
நிலைகள்
தொகு-
நிலை 1- கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை N1அ கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை N1ஆ கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை T1 அ கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை T1ஆ கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை T2 கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை T3 கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலை T4அ கேடயச் சுரப்பி புற்றுநோய்
-
நிலைT4ஆ கேடயச் சுரப்பி புற்றுநோய்
சான்றுகள்
தொகு- ↑ "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Cancer Fact sheet N°297". World Health Organization. பெப்பிரவரி 2014. Archived from the original on 29 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.
- ↑ "Defining Cancer". National Cancer Institute. Archived from the original on 25 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.
- ↑ 4.0 4.1 "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ Carling, T.; Udelsman, R. (2014). "Thyroid Cancer". Annual Review of Medicine 65: 125–37. doi:10.1146/annurev-med-061512-105739. பப்மெட்:24274180.
- ↑ "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 27 ஏப்பிரல் 2017. Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Cancer of the Thyroid - Cancer Stat Facts". seer.cancer.gov (in ஆங்கிலம்). Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ 10.0 10.1 World Cancer Report 2014. World Health Organization. 2014. pp. Chapter 5.15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9283204298.
- ↑ 11.0 11.1 "Cancer of the Thyroid - Cancer Stat Facts". seer.cancer.gov (in ஆங்கிலம்). Archived from the original on 15 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
- ↑ "Thyroid Cancer Treatment". National Cancer Institute (in ஆங்கிலம்). 12 மே 2017. Archived from the original on 16 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2017.
வெளியிணைப்புகள்
தொகு- கேடயச் சுரப்பி புற்றுநோய் குர்லியில்
- Cancer Management Handbook: Thyroid and Parathyroid Cancers பரணிடப்பட்டது 2017-05-17 at the வந்தவழி இயந்திரம்
- Management Guidelines for Patients with Thyroid Nodules and Differentiated Thyroid Cancer The American Thyroid Association Guidelines Taskforce (2015).
- Thyroid cancer statistics from Cancer Research UK