கேட்டரினா கோர்னோசுடாய்
கேட்டரினா கோர்னோசுடாய் | |
---|---|
கேட்டரினா கோர்னோசுடாய் | |
பிறப்பு | 15 மார்ச்சு 1989 லுட்ஸ்க் நகரம், சோவியத் குடியரசு (உக்ரைன்) |
படித்த கல்வி நிறுவனங்கள் | கீவ் நகரின் மொகிலா தேசிய பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2013– |
கேட்டரினா கோர்னோசுடாய் (Kateryna Gornostai, உக்குரேனிய மொழி: горностая Катерина பавливна; பிறப்பு: மார்ச் 15,1989) ஒரு உக்ரைனிய திரைப்பட
இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட ஆசிரியர் ஆவார்.[1] இவர் 2014 முதல் விஸ்-ஆர்ட் திரைப்பட விழாவின் நடுவராகவும், 2017 முதல் உக்ரேனிய திரைப்பட அகாதமியின் உறுப்பினராகவும் உள்ளார்.
வாழ்க்கை
தொகுகேட்டரினா கோர்னோசுடாய் மார்ச் 15,1989 அன்று வோலின் மாகாணத்தில் உள்ள லுட்ஸ்க் நகரத்தில் பிறந்தார். இவர் மனோதத்துவ நிபுணர்களான சுவெட்லனா வாசுகிவசுகா மற்றும் பாவெல் கோர்னோசுடே ஆகியோரின் ஒரே மகளாவார்.
இவர் 2010 ஆம் ஆண்டில் உயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2012 ஆம் ஆண்டில் கீவ் நகரின் மொகிலா தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் முதுகலை பட்டம் படித்தார். அக்டோபர் 2012 முதல் நவம்பர் 2013 வரை மாஸ்கோ நகரில் உள்ள மெரினா ரசுபெஷ்கினா மற்றும் மிகைல் உகாரோவின் ஆகியோரால் நடத்தப்பட்ட ஆவணப்படம் மற்றும் திரை குழுமத்தில் சேர்ந்து பட்டம் பெற்று பின்னர் உக்ரைனுக்கு திரும்பினார்.[2]
திரைப்பட வாழ்க்கை
தொகுகேட்டரினா 2012 ஆம் ஆண்டில் ஒரு ஆவணப்படத் தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தற்போது கல்வி ஆவணப்படங்களிலும், தனது சொந்த ஆவணப்படம் மற்றும் புனைகதை திரைப்படத் திட்டங்களிலும் பணியாற்றி வருகிறார். கீவ்-மொஹிலா அகாடமியின் ஜர்னலிசம் பள்ளியில் ஆவணப்படத் தயாரிப்பையும் கட்டேரினா கற்பிக்கிறார். இவரது செயற்கை தன்மை இல்லாமல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் திறன் திரைப்பட விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.[1]
திரைப்படவியல்
தொகுஆண்டு | ஆங்கிலப் பெயர் | வகை | தொழில் |
---|---|---|---|
2011 | ட்ரு நியூஸ் | ஆவணப்படம் | இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
2013 | பெட்வீன் அஸ் | ஆவணப்படம், குறும்படம், பாடநெறி வேலைபாடத்திட்டம் | இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
2014 | யூரோமைடன், ரப் கட் | ஆவணப்படம் | இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
2015 | அவே | புனைகதை குறும்படம் | இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
2015 | மைதான் இஸ் எவரிவேர் | நடுத்தர நீள ஆவணப்படம் | இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
2016 | கண்டென்ஸ்ட் மில்க் | புனைகதை குறும்படம் | இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
2017 | லிலாக் | புனைகதை குறும்படம் | இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
2018 | குரோகடைல் | புனைகதை குறும்படம் | இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
2021 | ஸ்டாப்-ஜெம்லியா | புனைகதை முழு நீளத் திரைப்படம் | இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் |
விருதுகள்
தொகுஆண்டு | திரைப்படம் | நியமனம் | திருவிழா |
---|---|---|---|
2015 | அவே | 2015 இல் சிறந்த உக்ரேனிய படம் | விஸ்-ஆர்ட் திரைப்பட விழா [3] |
2015 இல் சிறந்த நடிப்பு | ஒடிசா சர்வதேச திரைப்பட விழா | ||
2015 இல் சிறந்த உக்ரேனிய குறும்படம் | மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழா[4] | ||
2015 | மைதான் இஸ் எவரிவேர் | ஆண்ட்ரி மாட்ரோசோவ் விருது, 2015 | ஆவணங்கள் UA[5] |
2017 | லிலாக் | 2017 ஆம் ஆண்டில் சிறந்த உக்ரேனிய குறும்படத்திற்கான சிறப்பு நடுவர் குறிப்பு மற்றும் பரிசு | ஒடிசா சர்வதேச திரைப்பட விழா [6] |
2021 | ஸ்டாப்-ஜெம்லியா | இளைஞர் நடுவர் குழுவின் சிறந்த திரைப்படத்திற்கான கிரிஸ்டல் பியர் விருது | பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா[7] |
2021 ஆம் ஆண்டில் சிறந்த உக்ரேனிய படம்; சிறந்த நடிப்பு | ஒடிசா சர்வதேச திரைப்பட விழா [8] | ||
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதை | "கினோகோலோ" [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kateryna Gornostai - Director". First Cut Lab. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ "Kateryna Gornostai". dokweb. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
- ↑ "Wiz-Art 2015 winners". Wiz-Art Festival. 1 May 2015. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ ""Away" film by Kateryna Hornostai wins". Twitter. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "Winners of 12th Docudays UA". docudays. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "EN Announced International and National competition programs of the 8th OIFF 06 2017". oiff. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "Award-winning Films for a Young Audience as Part of the Berlinale Summer Special". Berlinaleaccess-date=1 June 2022.
- ↑ "The summary of the 12th Odesa International Film Festival has been announced". oiff. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ "'Stop-Zemlia' debut sweeps top prizes at Ukraine's film critics awards - KyivPost - Ukraine's Global Voice". KyivPosr. 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.