உக்ரைனியர்

ஐரோப்பாவின் ஆறாவது பெரிய நாடான உக்ரைனில் வாழும் கிழக்கு சிலாவிய மொழிகளைப் பேசுவோர் உக்ரைனியர் எனப்படுவர். இவர்களில் பெரும்பான்மையினர் உக்ரைனில் வாழ்ந்தாலும், குறிப்பிடத்தக்க அளவினர் அண்டை நாடுகளான உருசியா, செருமனி, போலந்து, செர்பியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் தாய்மொழி உக்குரைனிய மொழி ஆகும்.

உக்ரைனியர்கள்
(українці/ukrayintsi)
மொத்த மக்கள் தொகை

39.8[1]–57.5[2][3] million

குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள்
 உக்ரைன் 37,541,693[4]
 உருசியா 1,927,988[5]
 கனடா 1,209,085 [6][7]
 ஐக்கிய அமெரிக்கா 961,113 [6][8]
 பிரேசில் 500,000 [6][9]
 மல்தோவா 375,000 [6][10]
 கசக்கஸ்தான் 313,698 (2012) [11]
 இத்தாலி 320,070 [சான்று தேவை]
 போலந்து 49,000 (2011)[12] 300,000[சான்று தேவை]
 அர்கெந்தீனா 300,000 [6][13]
 பெலருஸ் 159,000 [14]
 உஸ்பெகிஸ்தான் 104,720 – 128,100 [6][15][16]
 செக் குடியரசு 126,613 [6][17]
 போர்த்துகல் 52,293 [18]
 உருமேனியா 51,703 [19]
 லாத்வியா 45,699 [20]
 அசர்பைஜான் 30,000 [21]
 சிரியா 27,878 [சான்று தேவை]
 எசுத்தோனியா 27,530 [22]
 கிர்கிசுத்தான் 21,924 [23]
 லித்துவேனியா 21,100 [24]
 கிரேக்க நாடு 19,785 [25]
 சியார்சியா 7,039 [26]
 டென்மார்க் 6,795 [27]
 ஆர்மீனியா 6,125 [28]
 செர்பியா 5,354 [29]
 பல்கேரியா 2,489 [30]
மொழிகள்
உக்ரைனியம்[31][32][33]
மதங்கள்

ராசும்கோவ் மைய ஆய்வுப்படி உக்ரைன் சமயக் கணிப்பு (2006):

மொத்த மக்கள் தொகையில்:

சமயம் சாராதவர்கள், இறைமறுப்பாளர்கள், மதப்பிரிவு சாராதோர்62.5%
சமயம் சார்ந்தோர், மதப்பிரிவு சார்ந்தோர்37.5%
சமய நம்பிக்கையுள்ளோர் தொகையில்:
உக்ரைன் மரபுவழிச் சபை (கீவ் குலமுதுவர் சபையகம்)38.9%;
உக்ரைன் மரபுவழிச் சபை (மாசுக்கோ குலமுதுவர் சபையகம்)29.4%;
உக்ரைன் தனிவகை மரபுவழிச் சபை2.9%;
கிரேக்க கத்தோலிக்கம்14.7%;
உரோமன் கத்தோலிக்கம்1.7%;
புரட்டஸ்தாந்தம்2.4%;
பிற சமயங்கள்2.9%;

சமயம் தெரியாது என்போர்7.0%;

உக்ரைனியர்கள் என்பது உக்குரைனிய மொழி பேசும் அனைவரையும் குறிக்கும் என்றாலும், உக்ரைனில் வாழும் பிற மொழியினரையும் சில வேளைகளில் இச்சொல் குறிக்கும்.[34] பெலாருசியர்களும், உருசியர்களும் இவர்களுடன் நெருங்கிய இனத்தவர்கள் ஆவர். உக்ரைனியர்கள் என்ற பெயரே இருபதாம் நூற்றாண்டில் வழங்கப்படுவதுதான். முன்னர் இவர்கள் ருசி, ருசிச்சி என்றும் அழைக்கப்பட்டனர். (முன்பு இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பான ருசு என்னும் பகுதியின்மூலம் இப்பெயர் பெற்றனர்.) [35][36] இன்றைக்கு குறிப்பிடத்தக்க உக்ரைனியர்கள் உருசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரசில், கசகசுத்தான், இத்தாலி, அர்கெந்தீனா ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.[37] சில தகவல்மூலங்கள் கூறும் கணக்கின்படி, உக்ரைனுக்கு வெளியே ஏறத்தாழ இருபது மில்லியன் மக்கள் உக்ரைனியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனராம்.[3][38][39]. இருப்பினும், அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் பத்து மில்லியன் மக்கள் உக்ரைனியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உலகில் பரந்து வாழும் மக்களுள் உக்ரைனியர்களும் அடங்குவர்.

புவியில் பரம்பல் தொகு

 
"உக்ரைனில் மக்கள் பரம்பல்" சிவப்பில் உள்ள பகுதிகளில் உக்ரைனியர்கள் வாழ்கிறார்கள்.

உக்ரைனியர்கள் பலர் உக்ரைனில் தான் வாழ்கிறார்கள். உக்கிரனில் மூன்றில் ஒருவர் உக்ரைனிய மொழி பேசுபவர். உக்ரைனுக்கு அடுத்தபடியாக அதிகம் வாழும் நாடு உருசியா.[5]

உருசியக் குடிமக்கள் பலர் தங்களை உக்ரைனியர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பலரின் முன்னோர் உக்ரைனியர்கள் ஆவர். [40]

சில கருதுகோள்களின்படி, வட அமெரிக்காவில் 2.1 மில்லியன் மக்களும், பிரசிலில் 5,00,000 மக்களும், மோல்டோவாவில் 3,75,000 மக்களும், கசகசுத்தானில் 333,000 மக்களும் போலந்தில் 3,50,000 மக்களும், அர்கெந்தீனாவில் 3,00,000 மக்களும் உக்ரைனியர்களாக வாழ்கின்றனர்.[13] மேலும் பெலாருசு, போர்த்துகல், ரோமானியா, சுலோவாக்கியா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்திரேலியா, செருமனி, லத்வியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, அயர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவினர் வாழ்கின்றனர்.

 
கிழக்கு சிலாவிய இனக்குழுக்கள் வாழ்ந்த ஐரோப்பியப் பகுதிகள்

வரலாற்றின் கணக்கில் நோக்குங்கால், உக்ரைனியர்கள், பெலாருசியர்கள், உருசியர்கள் ஆகியோருடன் மொழித் தொடர்பைக் கொண்டிருந்தனர். கர்பதீனிய மலைத்தொடரிலிந்து வெள்ளைக் கடல் வரையிலும் ஒரே மக்கள் வாழ்ந்ததாகவும், இவர்களே பின்னர் உருசியர்கள், பெலாருசியர்கள் எனவும் பிரிந்து சென்றனர்.[41]

சமயங்கள் தொகு

சமய நம்பிக்கையுள்ளவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவ சமய உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஆர்த்தோடாக்சு கிறித்தவர்கள் ஆவர். கீவ் மற்றும் மசுக்கோ பேற்றியார்க்கைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகளவில் உள்ளன. ப்ரொடெசுட்டாண்டு, கிரேக்கக் கத்தோலிக்கம் ஆகிய உட்பிரிவுகளைப் பின்பற்றுவோரும் உள்ளனர். [42] யூதம், இசுலாம் ஆகிய சமயங்களைப் பின்பற்றும் சிறுபான்மையினரும் இங்கு வாழ்கின்றனர்.

நடனம் தொகு

உக்ரைனிய நாட்டுப்புறத்தவரின் நடனமே உக்ரைனிய நடனமாகக் கூறப்படுகிறது. கச்சேரிகளில் இவ்வகை நடனங்கள் ஆடப்பெற்றன. உக்ரைனிய நாட்டுப்புறக்கலைகள் இன்றளவும் நிலைத்திருக்கின்றன. உக்ரைனிய நடனம் எழுச்சி மிக்கதாவும், சுறுசுறுப்பானதாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் இருக்கும் என்பதால், உலகெங்கும் பரவலாக அறியப்படுகிறது.

உக்ரைன் வரலாற்றுப் பகுதிகள் தொகு

உக்ரைனின் பெரும்பகுதிகள் ஐரோப்பாவில் அமைந்துள்ளன. சில ஆண்டுகள் உக்ரைனியப் பகுதிகள் பல அண்டை நாடுகளினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும் தொகு


மேற்கோள்கள் தொகு

  1. Ukrainians at the Joshua Project
  2. The Ukrainian World Congress states that the Ukrainian diaspora makes 20 million: 20mln Ukrainians living abroad பரணிடப்பட்டது 2012-01-05 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 "UWC continually and diligently defends the interests of over 20 million Ukrainians". Ucc.ca. 2010-05-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02. பிழை காட்டு: Invalid <ref> tag; name "ucc.ca" defined multiple times with different content
  4. "Results / General results of the census / National composition of population". All-Ukrainian Census, 2001. 2001. Archived from the original on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  5. 5.0 5.1 Ethnic composition of the population of the Russian Federation பரணிடப்பட்டது 2021-12-23 at the வந்தவழி இயந்திரம் / Information materials on the final results of the 2010 Russian census பரணிடப்பட்டது 2020-04-30 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்) பிழை காட்டு: Invalid <ref> tag; name "rus2010" defined multiple times with different content
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Statistics include non-primary ancestry reports. "Ukrainians" being of partial descent figured in numbers.
  7. "Ethnic origins, 2006 counts, for Canada, provinces and territories – 20% sample data". Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2012-11-26.
  8. ""Census 2006 ACS Ancestry estimates"". Factfinder.census.gov. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "People of Ukrainian descent in Brazil". Parana.pr.gov.br. Archived from the original on 2007-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  10. "Moldova". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. Агентство Республики Казахстан по статистике: Численность населения Республики Казахстан по отдельным этносам на 1 января 2012 года
  12. 2011 Census. Central Statistical Office (Poland). 2012. pp. 105-106
  13. 13.0 13.1 Ucrania.com பரணிடப்பட்டது 2013-12-27 at the வந்தவழி இயந்திரம் (in Spanish) பிழை காட்டு: Invalid <ref> tag; name "Ucrania.com" defined multiple times with different content
  14. "Belarus National Census 2009. Ethnic composition". National Statistical Committee of the Republic of Belarus. 2009. Archived from the original on 2009-11-03. பார்க்கப்பட்ட நாள் 2010-12-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. "Ethnic Atlas of Uzbekistan". «ООФС — Узбекистан». பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
  16. "Startseite". Statistisches Bundesamt Deutschland. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.
  17. "Article". Ucrania.com (in Spanish). Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2007-08-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. População Estrangeira em Portugal – 2009 (PDF), December 31, 2009, பார்க்கப்பட்ட நாள் 2011-04-16
  19. "Romanian 2011 census" (PDF). www.edrc.ro. Archived from the original (PDF) on 2019-08-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
  20. "On key provisional results of Population and Housing Census 2011 | Latvijas statistika". Csb.gov.lv. 2012-01-18. Archived from the original on 2018-07-06. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-26.
  22. "Population by ethnic nationality, 1 January, years". Statistics Estonia. 2011. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  23. "Kyrgyzstan National Census 2009, population by ethnicity" (PDF). Department of Kyrgyzstan. Archived (PDF) from the original on 2011-05-30. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
  24. "Gyventojų skaičius metų pradžioje. Požymiai: tautybė – Rodiklių duomenų bazėje". Db1.stat.gov.lt. Archived from the original on 2017-04-29. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20120906042802/http://db1.stat.gov.lt/statbank/selectvarval/saveselections.asp?MainTable= ignored (help)
  25. "Untitled" (PDF). Statistics.gr. Archived from the original (PDF) on 2015-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  26. "2002 Georgian census" (PDF). Archived from the original (PDF) on 2013-11-01. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  27. "Statistics Denmark:FOLK2: Population 1. January by sex, age, ancestry, country of origin and citizenship". Statistics Denmark. பார்க்கப்பட்ட நாள் 3 August 2012.
  28. Joshua Project. "Tajik, Afghan of Afghanistan Ethnic People Profile". Joshuaproject.net. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  29. "Vesti – Ukrajinci u Srbiji". B92. 2004-11-28. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  30. "2001 Official Bulgarian Census statistics". Nsi.bg. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  31. "Ukrainians". Encyclopediaofukraine.com. 1990-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  32. http://slovari.yandex.ru/dict/bse/article/00082/02700.htm?text=%D1%83%D0%BA%D1%80%D0%B0%D0%B8%D0%BD%D1%86%D1%8B&stpar3=1.1[தொடர்பிழந்த இணைப்பு]
  33. "Ukraine Facts, information, pictures | Encyclopedia.com articles about Ukraine". Encyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-30.
  34. Definition of UKRAINIAN, Merriam-Webster
  35. "The oldest recorded names used for the Ukrainians are Rusyny, Rusychi, and Rusy (from Rus')". Encyclopediaofukraine.com. 1990-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  36. "Identification and National Identity of Ukrainians". Everyculture.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  37. "History and ethnic relations in Ukraine", Every Culture
  38. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  39. "20 million Ukrainians live in 46 different countries of the world". Ukraine-travel-advisor.com. 2001-12-05. Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  40. "The inhabitants of the Kuban have three identities". Encyclopediaofukraine.com. 1990-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  41. "Rus'. The former name of Ukraine". Encyclopediaofukraine.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-02.
  42. Adrian Ivakhiv. In Search of Deeper Identities: Neopaganism and Native Faith in Contemporary Ukraine. Nova Religio, 2005.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ரைனியர்&oldid=3842783" இலிருந்து மீள்விக்கப்பட்டது