கேத்தரின் யுஷ்செங்கோ
கேத்தரின் மைக்காலிவ்னா யுஷ்செங்கோ ( Kateryna Mykhaylivna Yushchenko ) என்கிற சுமாசென்கோ ; செப்டம்பர் 1, 1961) இவர் முன்னாள் உக்ரைன் குடியரசுத் தலைவர் விக்டர் யுஷ்செங்கோவை மணந்த காரணத்தால் 2005 முதல் 2010 வரை உக்ரைனின் முதல் பெண்மணியாக இருந்தார்.
கேத்தரின் யுஷ்செங்கோ Катерина Ющенко | |
---|---|
2012 இல் கேத்தரின் | |
உக்ரைனின் முதல் பெண்மனி | |
பதவியில் 23 பெப்ரவரி 2005 – 25 பெப்ரவரி 2010 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யுஷ்செங்கோ |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கேத்தரின் கிளாரி சுமாசெங்கோ[1] செப்டம்பர் 1, 1961 சிகாகோ இலினொய், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வாழ்க்கை துணைவர்(கள்) | விக்டர் யுஷ்செங்கோ (தி. 1998)
|
பிள்ளைகள் | 3 |
படித்த கல்வி நிறுவனங்கள் | எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளியுறவுத் துறை பள்ளி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
பெற்றோர்
தொகுகேத்தரினாவின் தந்தை, மைக்கைலோ சுமாசென்கோ, 1917 ஆம் ஆண்டில், கார்கிவ் மாகாணத்தில் உள்ள சைட்சிவ்கா கிராமத்தில், ஒரு பெரிய விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். 1932-1933 சோவியத் பஞ்சத்தில் இருந்து தப்பிய அவரது பெரிய குடும்பத்தின் ஒரு சில உறுப்பினர்களில் இவரும் ஒருவர். சுமாசென்கோ மின் பொறியியல் படித்தவர். அவர் சோவியத் இராணுவத்திலும் பணியாற்றினார். மேலும் ஜெர்மன் படைகளால் கைப்பற்றப்பட்டு 1942 இல் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவரது தாயார், சோபியா, 1927 ஆம் ஆண்டில், கீவ் மாகாணத்தின் லிட்கியில் பிறந்தார். மேலும் 30 செப்டம்பர் 2012 இல் கியேவில் இறந்தார். இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் மீதான நாசி செருமானிய படையெடுப்பிற்குப் பிறகு, தனது கிராமத்தைச் சேர்ந்த பல இளம் பெண்களுடன் சேர்ந்து, சோபியா அடிமைத் தொழிலாளியாக பணியாற்றுவதற்காக 14 வயதில் நாட்சி ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர்கள் இருவரும் ஜெர்மனியில் சந்தித்து, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1945 இல் லிடியா என்ற மூத்த மகள் பிறந்தர். மைக்கைலோ சுமாசென்கோ 1945 இல் காசநோயால் கடுமையாக நோய்வாய்ப்பட்டு காசநோய் சுகாதார நிலையத்தில் எட்டு ஆண்டுகள் கழித்தார்.
சுயசரிதை
தொகுஇவர் இடது கரை உக்ரைனிலிருந்து குடியேறியவர்களுக்கு சிகாகோவில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கேத்தரின் கிளாரி சுமாசெங்கோவாக பிறந்தார். ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளியுறவுத் துறை பள்ளியில் சர்வதேச பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும் (1982), சிகாகோ பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (1986) பட்டமும் பெற்றுள்ளார்.
அமெரிக்க நிர்வாகப் பணி
தொகுஇவர் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியாவார். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவி செயலாளரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றினார் பின்னர் இவர் ரொனால்ட் ரீகனின் நிர்வாகத்தின் போது வெள்ளை மாளிகை பொது தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர், ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் நிர்வாகத்தின் போது அமெரிக்க கருவூலத்தில் நிர்வாகச் செயலாளரின் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்தப் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, இவர் ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் கூட்டுப் பொருளாதாரக் குழுவின் ஊழியர்களில் இருந்தார். உக்ரைன் தனது சுதந்திரத்தை அறிவித்த பிறகு, இவர் உக்ரைன்-அமெரிக்க அறக்கட்டளையின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராக இருந்தார்.
திருமணம்
தொகு1993 ஆம் ஆண்டில், இவர் கேபீஎம்ஜி குழுமத்தின் வங்கிப் பயிற்சித் திட்டத்தில் ஆலோசகராக சேர்ந்தார். அங்கு விக்டர் யுஷ்செங்கோவைச் சந்தித்தார். பின்னர் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
தொண்டு பணிகள்
தொகுகேத்தரினா யுஷ்செங்கோ இப்போது உக்ரைன் 3000 பன்னாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து பல தொண்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளார். [2] அறக்கட்டளையின் முக்கிய முன்னுரிமை உக்ரைனின் குழந்தைகளுக்கு சிறந்த ஆரோக்கியம் தருவதாகும். 2001 இல் நிறுவப்பட்ட உக்ரைனின் 3000 அறக்கட்டளையின் மேற்பார்வைக் குழுவில் , உக்ரைனின் மிக முக்கியமான கல்வி, மனிதாபிமான, கலாச்சார, இலக்கிய மற்றும் விளையாட்டுப் பிரமுகர்கள் ஆகியோர் இடம் பெற்ருள்ளனர். குடியரசுத் தலைவர் விக்டர் யுஷ்செங்கோ 2005 இல் பதவியேற்கும் வரை மேற்பார்வைக் குழுவின் தலைவராக பணியாற்றினார். அப்போதிருந்து, அதன் தலைவராக கேடரினா யுஷ்செங்கோ இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sneed, Michael (11 March 2022). "How Chicago taught Ukraine's former first lady to have hope". Chicago Sun-Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
- ↑ "Kateryna Yushchenko's Biography | Ukraine 3000 International Charitable Fund". www.ukraine3000.org.ua. பார்க்கப்பட்ட நாள் 2015-12-17.
வெளி இணைப்புகள்
தொகு- Profile, latimes.com, December 29, 2004. (archived)
- The Ukraine 3000 International Charitable Foundation