கேனரி தீவுகள்

கேனரி தீவுகள் (Canary Islands) மொராக்கோவின் கடற்கரையை அடுத்துள்ள தீவுக்கூட்டமாகும். இவை எசுப்பானியாவின் கீழுள்ள தன்னாட்சிப் பகுதிகளாகும். இத்தீவுக்கூட்டத்தில் ஏழு முதன்மைத் தீவுகள் உள்ளன. அவை: லா பால்மா, லா கோம்ரா, எல் ஹீரோ, தெனெரீஃப், கிரான் கனரியா, லான்சரோட் மற்றும் ஃபுயுர்தெவென்டுரா. அடுத்த மூன்று தீவுகள் அலெக்ரான்சா, லா கிரேசியோசா மற்றும் மொன்டானா கிளாரா. இங்கு பேசப்படும் மொழி எசுப்பானியம் ஆகும். இந்த தன்னாட்சி பிரதேசத்திற்கு இரண்டு சமநிலையிலுள்ள தலைநகர்கள் உள்ளன: "சான்டா குரூஸ் டெ தெனெரீஃப்", "லா பால்மா டெ கிரான் கனரியா". ஒவ்வொரு தீவும் கடலின் அடியிலிருந்து பல ஆண்டுகளாக மேலே எழுந்த எரிமலைகளால் உருவானவை. தெனெரீஃப்பில் உள்ள தேய்ட் எரிமலை கனரி தீவுகளில் மட்டுமல்லாது எசுப்பானியாவிலேயே உயரமான மலையாகும்.

கேனரி தீவுகள்
Islas Canarias
தன்னாட்சி பகுதி
மஸ்கா(தெனெரீஃப்)
மஸ்கா(தெனெரீஃப்)
கேனரி தீவுகள் கொடி
கொடி
கோட் ஆஃப் ஆர்ம்ஸ்
சின்னம்
கேனரி தீவுகள் அமைவிடம்
கேனரி தீவுகள் அமைவிடம்
CapitalSanta Cruz de Tenerife
and Las Palmas de Gran Canaria
அரசு
 • குடியரசுத்தலைவர்பௌலினோ ரிவெரோ (கனரியா கூட்டணி
பரப்பளவு
(1.5% எசுப்பானியா)
 • மொத்தம்7,447 km2 (2,875 sq mi)
மக்கள்தொகை
 (2009)[1]
 • மொத்தம்20,98,593
 • மக்கள்தொகை
8வது
 • இனங்கள்
85.7% எசுப்பானியர் (கனரி தீவினர்
மற்றும் தீபகற்பத்தினர்) 14.3%
வெளிநாட்டவர்
Demonym
ISO 3166-2
ES-CN
AnthemArrorró
Official languagesSpanish
Statute of AutonomyAugust 16, 1982
ParliamentCortes Generales
Congress seats15
Senate seats13 (11 elected, 2 appointed)
இணையதளம்Gobierno de Canarias

இங்கு இருந்த பழங்குடிகள் காஞ்ச் என அழைக்கப்பட்டனர். ஐரோப்பாவிலிருந்து முதலில் இங்கு குடியேறிய எசுப்பானியர் இவர்களுடன் சண்டையிட்டதில் பெரும்பான்மையினர் மடிந்தனர். எஞ்சியவர்கள் எசுப்பானிய பண்பாட்டுடன் கலந்தனர். பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தீவுகளை ஆளுமைப்படுத்த சண்டையிட்டன. ஆனால் இறுதியில் எசுப்பானியா உரிமை கொண்டது. பல கடற்கொள்ளையர்களுடனும் சண்டைகள் நடந்துள்ளன. மிக அண்மையில் எல்லைத் தகராறு மொராக்கோ நாட்டுடன் எழுந்துள்ளது.

எசுப்பானியர் குடியேற்றத்தைத் தொடர்ந்து இங்கு போர்த்துகீசியர்கள், பெல்ஜியத்தினர், மால்டா நாட்டவர் எனப் பலர் இங்கு குடியேறியுள்ளனர். அண்மைக்காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு பப்பாளிப்பழம், வாழை முதலிய பழங்களை விவசாயம் செய்கிறார்கள். வாழையும் புகையிலையும் ஏற்றுமதியாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Official Population Figures of Spain. Population on the 1 January 2009" (PDF). Instituto Nacional de Estadística de España. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.

உசாத்துணைகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேனரி_தீவுகள்&oldid=3515830" இலிருந்து மீள்விக்கப்பட்டது