கேன்டர் (Cantor) என்பது அறிவியல் புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான கட்டற்ற கணித மென்பொருள் ஆகும். [1] [2] இது கே டீ ஈமென்பொருள் தொகுப்பு 4 இன் ஒரு பகுதியாகும், மேலும் கே டி ஈ கல்வித் திட்டத்தின் கேதீது தொகுப்பின் ஒரு பகுதியாக இதன் 4.4 பதிப்பு வெளியானது.

கேன்டர்
வடிவமைப்புஅலெக்சாந்தர் ரீதர்
உருவாக்குனர்கே டீ ஈ கல்வித் திட்டம்
தொடக்க வெளியீடு2009; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2009)
மொழிசி++
இயக்கு முறைமைAny Unix-like, விண்டோசு, மேக் ஓஎஸ்
மென்பொருள் வகைமைகணித மென்பொருள்
உரிமம்குனூ
இணையத்தளம்cantor.kde.org

அம்சங்கள்

தொகு

கேன்டர் என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுகமாகும், இது அதன் கணித செயல்பாடுகளை பல பின் மற்றும் முன் இணைப்புகளுக்கு வழங்குகிறது. அதன் சொருகி அடிப்படையிலான அமைப்பு வெவ்வேறு இணைப்புகளைச் சேர்க்க அனுமதிக்கிறது. இது ஜூலியா, கே அல்ஜீப்ரா, லுவா, மாக்சிமா, ஆக்டேவ், பைத்தான், ஆர், சேஜ்மேத் ,சைலாப் மற்றும் கால்குலேட் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்!, . [3] [4]

கேன்டர் ஒரு நிலையான இடைமுகத்தை வழங்குகிறது; அதன் திட்டப்பக்கம் பின்வரும் அம்சங்களை பட்டியலிடுகிறது: [3]

  • வெளிப்பாடுகளை மதிப்பிடுவதற்கான சிறந்த பணித்தாள் பார்வை
  • பணித்தாள் அல்லது தனி சாளரத்தில் முடிவுகளை பார்க்கும் வசதி
  • LaTeX ஐப் பயன்படுத்தி கணித சூத்திரங்களின் தட்டச்சு அமைத்தல்

சான்றுகள்

தொகு
  1. Müller, Andrea (2010-02-10). "KDE SC 4.4: Fresh breeze for KDE". பார்க்கப்பட்ட நாள் 2010-05-15. Cantor [is one of the] new applications. Cantor is a scientific statistics and analysis program….
  2. Bhat, Sathya (2010-02-10). "openSUSE 11.3 Milestone 1 makes its appearance". Archived from the original on 2010-04-29. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15. …new applications such as … Rocs & Cantor – the scientific applications for advanced math and graph theory needs.
  3. 3.0 3.1 Mahfouf, Anne-Marie (2015-12-15). "The KDE Education Project - Cantor". பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.
  4. Rieder, Alexander. "The Cantor Handbook" (PDF). KDE-Edu. Archived from the original (PDF) on 2015-09-09. பார்க்கப்பட்ட நாள் 2016-04-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்டர்&oldid=3551447" இலிருந்து மீள்விக்கப்பட்டது