லூவா

இலகுவான நிரலாக்க மொழி


லூவா (Lua, /ˈlə/ LOO, போர்த்துக்கேய மொழி: lua [ˈlu.(w)ɐ] "நிலா" எனப் பொருள்படும்) என்பது முதன்மை நோக்கமாக விரிவுபடுத்தக்கூடிய ஆணைச்சொற்களுடன் கூடிய படிவ நிரலாக்க மொழியாக வடிவமைக்கப்பட்ட இலகுவான பல்திறப்பட்ட-கருத்தோட்ட நிரல் மொழி ஆகும். இது ஐஎஸ்ஓ சியில் எழுதப்பட்டுள்ளதால் அனைத்து இயக்குத்தளங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.[1] பிற படிவ நிரலாக்க மொழிகளை விட லூவா எளிமையான சி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் கொண்டுள்ளது.

லூவா
நிரலாக்கக் கருத்தோட்டம்:நிரலாக்க கருத்தோட்டம்: படிவ நிரலாக்கம், ஏவல் (செயல்முறை, முன்னுதாரணம் சார்ந்த பொருள்-நோக்கு), பணிமுறை நிரலாக்கம்
தோன்றிய ஆண்டு:1993
வடிவமைப்பாளர்:இராபர்ட்டோ லெருசலிம்க்கி
வால்டெமர் செலசு
லூயி என்ரிக் டெ பிகரிடோ
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:5.2.1
அண்மை வெளியீட்டு நாள்:சூன் 8, 2012 (2012-06-08)
இயல்பு முறை:டைனமிக், வலியது, டக்
முதன்மைப் பயனாக்கங்கள்:லூவா, LuaJIT, LLVM-Lua, Lua Alchemy
மொழி வழக்குகள்:மெடாலூவா, ஐடில், ஜிஎஸ்எல் ஷெல்
பிறமொழித்தாக்கங்கள்:சி++, சிஎல்யூ நிரல் மொழி, மோடுலா, இசுகீம், SNOBOL
இம்மொழித்தாக்கங்கள்:Io, GameMonkey, Squirrel, Falcon, MiniD
இயக்குதளம்:Cross-platform
அனுமதி:MIT License
இணையதளம்:www.lua.org

இந்த நிரல்மொழி 1993 இல் இராபர்டோ லெருசலிம்க்கி, லூயி என்ரிக் டெ பிகுய்ரிடோ மற்றும் வால்டெமர் செலசால் உருவாக்கப்பட்டது.[2] லூவா பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது; வேர்ல்டு ஆப் வார்கிராஃப்ட் போன்ற பெரும்பான்மையான நிகழ்பட ஆட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. [3] சூன் 2010இல், ஆப்பிள் நிறுவனம் லூவாவை பயன்படுத்துவதற்காக தனது ஐஓஎசு இயக்குதளத்திற்கான மென்பொருள் மேம்படுத்தல் பொதியை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை மாற்றியது.[4] இதனால் ஆங்க்ரி பேர்ட்சு போன்ற ஐ-போன் பயன்பாடுகள் உருவாக்கப்பட வழிவகுத்தது. சூன் 2011இல் லூவா நிரலாக்க மொழிகளில் மிகவும் பரவலான மொழிகளில் பத்தாவது இடத்தில் இருந்தது.[5]

எடுத்துக்காட்டு தொகு

  • லூவாவில் எழுதப்பட்ட நிரலுக்கு ஓர் எடுத்துக்காட்டு:
#!/usr/bin/lua
print("வருக வையகமே!")
  • ஒரு மதிப்பை அளித்து அதனை அச்சடிக்க வைப்பதற்கான காட்டு:
#!/usr/bin/lua
a = "வருக வையகமே!"
print(a)
  • நிரலிடைக் குறிப்புகளை (comment) ஒரே வரியில் எழுத
#!/usr/bin/lua
--நிரலிடைக் குறிப்பு
  • நிரலிடைக் குறிப்புகளை பல வரிகளில் எழுத
#!/usr/bin/lua
--[[
நிரலிடைக் குறிப்பு
நிரலிடைக் குறிப்பு
நிரலிடைக் குறிப்பு
]]

மேற்சான்றுகள் தொகு

  1. "About Lua". Lua.org. பார்க்கப்பட்ட நாள் 2011-08-11.
  2. Ierusalimschy, R.; Figueiredo, L. H.; Celes, W. (2007). "The evolution of Lua". Proc. of ACM HOPL III. பக். 2–1–2–26. doi:10.1145/1238844.1238846. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59593-766-X. http://www.lua.org/doc/hopl.pdf. 
  3. "Lua Uses". lua-users wiki. பார்க்கப்பட்ட நாள் 16 February 2011.
  4. "Apple relaxes iOS SDK terms to allow Lua but block Flash". AppleInsider. 11 June 2010. பார்க்கப்பட்ட நாள் 11 June 2011.
  5. "TIOBE Programming Community Index for June 2011". TIOBE Software. June 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூவா&oldid=3851608" இலிருந்து மீள்விக்கப்பட்டது