கேப்டன் துஷார் மகாஜன்
கேப்டன் துஷார் மகாஜன் (சௌர்யா சக்கரம்) (Captain Tushar Mahajan) (பிறப்பு:20 ஏப்ரல்1989 – 21 பிப்ரவரி 2016), இந்தியத் தரைப்படையின் ஒரு பிரிவான சிறப்புப் படையின் அதிகாரி ஆவார். 21 பிப்ரவரி 2016 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த லஷ்கர்-ஏ-தொய்பாவின் 3 தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி[1] வீழ்த்திய பிறகு கேப்டன் துஷார் மகாஜன் வீரமரணம் எய்தினார். மறைந்த கேப்டன் துஷார் மகாஜனின் வீரத்தைப் பாராட்டி இந்திய அரசு சௌர்யா சக்கரம் விருது வழங்கி பெருமை சேர்த்தது.[2]
கேப்டன் துஷார் மகாஜன் | |
---|---|
பிறப்பு | உதம்பூர் | 20 ஏப்ரல் 1989
இறப்பு | 21 பெப்ரவரி 2016 |
சார்பு | இந்தியா |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 12 சூன் 2010 – 21 பிப்ரவரி 2016 |
தரம் | கேப்டன் |
தொடரிலக்கம் | IC-72326 |
படைப்பிரிவு | பாரசூட் சிறப்புப் படைகள் |
விருதுகள் | சௌர்யா சக்கரம் : |
இளமை
தொகுஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் தேவ்ராஜ் குப்தா-ஆஷா குப்தா தம்பதியருக்கு 20 ஏப்ரல் 1989 அன்று துஷார் மகாஜன் பிறந்தார். மேனிலைப் பள்ளிக் கல்வி முடித்த துஷார் மகாஜன் தேசியப் பாதுகாப்புக் கழகத்தில் பயிற்சி பெற்று இந்தியத் தரைப்படையில் லெப்டினண்ட் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் சிறப்புப் படையின் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
விருதுகள்
தொகுமரபுரிமைப் பேறுகள்
தொகுஇந்திய அரசு மற்றும் இந்திய இரயில்வே இணைந்து துஷார் மகாஜனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உதம்பூர் தொடருந்து நிலையத்திற்கு 2023ஆம் ஆண்டில் தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம் எனப்பெயரிட்டது.[3]
இதனையும் காண்க
தொகு- 2003 புல்வாமா படுகொலைகள்
- தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம் (பழைய பெயர் உதம்பூர் தொடருந்து நிலையம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ 2016 Pampore stand-off
- ↑ Captain Tushar Mahajan SC
- ↑ "Udhampur railway station renamed to ‘Martyr Captain Tushar Mahajan Railway Station’". The Times of India. 2023-09-18. https://timesofindia.indiatimes.com/india/udhampur-railway-station-renamed-to-martyr-captain-tushar-mahajan-railway-station/articleshow/103699975.cms.