கேப்மாரி மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

கேப்மாரி மக்கள் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி புறநகர் பகுதியான ராம்ஜி நகரில் அதிகமாக வாழும் மக்கள்.[1] தெலுங்கு, கன்னடம் கலந்த தமிழ் மொழி பேசுபவர்கள். திருச்சியில் ஆலைத்தொழிலாளர்களாக பணிபுரிந்த இம்மக்களில் பலர் காலப்போக்கில் கொள்ளையர்களாக மாறினர். இவர்களை ‘கேப்மாரிஸ்’ என காவல்துறை பதிவேடுகளில் குறிப்பிட்டாலும், தங்களை ”இனத்தான்” என அழைத்துக் கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு இம்மக்களை சீர்மரபினர் பட்டியலில் வைத்துள்ளனர்.[2] இவர்கள் கொலை மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்றாலும் பெரிய அளவிளான கொள்ளைகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர். மேலும் எளிதில் காவல்துறையினரிடம் சிக்குவதில்லை. அப்படியே சிக்கிக் கொண்டாலும் அவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்களை சிறைக்கு அனுப்பி விடுவார்கள். இந்தியா முழுவதும் சென்று கொள்ளையடிப்பதால், இவர்களது விவரங்கள் அனைத்து இந்திய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொள்ளையடிக்கச் செல்வதை வல்லடைக்குச் செல்லுதல் என்பர்.[3]

மேற்கோள்கள்

  1. http://joshuaproject.net/people_groups/17139/IN
  2. http://www.tnpsc.gov.in/communities-list.html#dc பரணிடப்பட்டது 2015-12-06 at the வந்தவழி இயந்திரம் கேப்மாரிகள், சீர்மரபினர் பட்டியல், வரிசை எண் 35
  3. காவல் துறையினரை கதிகலங்க வைக்கும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள், தி இந்து, சூன் 29, 2014

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்மாரி_மக்கள்&oldid=4056376" இலிருந்து மீள்விக்கப்பட்டது